வீதியில் கிடந்த 2.5 மில்லியன் ரூபா - அவுஸ்திரேலியாவில் பாராட்டை பெற்ற இலங்கையர்
அவுஸ்திரேலியாவில் மிகவும் நேர்மையாக செயற்பட்ட இலங்கையர் தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.
மெல்பேர்ன் பகுதியில் காணாமல் போன பணப்பை ஒன்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நபர்கள் 19500 அவுஸ்திரேலிய டொலர்களை (2.46 மில்லியன்) வங்கியில் மாற்றி கொண்டு பிட்ஸா கடை ஒன்றுக்கு சென்று அமர்ந்துள்ளனர்.
பிட்ஸாவுக்கு காத்திருந்த நபர்களில் ஒருவரது கையில் இருந்து பணப்பை கீழே விழுந்துள்ளது. எனினும் அதனை கவனிக்காமல் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
பலர் அங்கு நடமாடியுள்ளனர். அங்குள் CCTV கமரா அதனை படம்பிடித்த போதிலும் அதனை ஒருவரும் அவதானிக்கவில்லை.
இந்நிலையில் அங்கு வந்த சாரதி ஒருவர் அதனை கண்டெடுத்து, கடையின் உரிமையாளரான இலங்கையரிடம் கொடுத்துள்ளார்.
இதன்போது அந்து பணத்தை தொலைத்தவர்கள் பதற்றத்துடன் கடைக்கு வந்து பையை தேடியுள்ளனர். அதனை அவதானித்த இலங்கையரான கடை உரிமையாளர் பையை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
பை கிடைத்த மகிழ்ச்சியில் இலங்கையருக்கு ஒரு தொகை பணத்தை அவுஸ்திரேலியர்கள் வழங்கியுள்ளனர். எனினும் அதனை வாங்க கடையின் உரிமையாளர் மறுத்துள்ளார்.
குறித்த கடை உரிமையாளர் இலங்கையின் வரக்காபொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
Post a Comment