Header Ads



சவுதியில் போதைபொருள் கடத்திய 21 பேருக்கு மரண் தண்டனை

சவுதி அரேபியாவில் போதை பொருள் கடத்தியதற்காக 21 பேருக்கு மரண் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் போதைப் பொருள், பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது.

இதில் சவுதி அரேபியாவில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 172 பேருக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களுக்காக 43 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் 21 பேர் போதை பொருள் கடத்திய குற்றத்திற்காவும், 22 பேர் மதத்தை இழிவுபடுத்தியது, தீவிரவாதம், பாலியல் குற்றச்சாட்டு காரணமாகவும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.