Header Ads



SLBC செய்திப் பணிப்பாளராக, ஜூனைத் M ஹாரிஸ் நியமனம்


இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் புதிய செய்திப் பணிப்பாளராக ஜூனைத் எம் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் பணிப்புரைக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் தாராக்குடிவில்லு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் கலைமாணிப்பட்டம் (B.A in sociology)பெற்றவராவார்.

சர்வதேச உறவுகள் தொடர்பான கற்கையில் முதுமாணிப் பட்டம் (M.A in International Relationships) பெற்றவர். ஐரோப்பிய பல்கலைக்கழகமொன்றில் தற்சமயம் கலாநிதிக் கற்கைக்கான பதிவையும் மேற்கொண்டுள்ளார். மூன்று மொழிகளிலும் நிபுணத்துவ அறிவுபெற்ற இவர் செய்தி ஊடகவியல்15 வருட அனுபவம்பெற்றவராவார்.

Farzan Bathal

No comments

Powered by Blogger.