குள்ள மனிதர்களின் அட்டகாசம் அதிகரிப்பு, கண்டுபிடிக்க பொலிஸார் முயற்சி - பெண்களா இலக்கு ?
இலங்கையின் பல பகுதிகளில் அச்சுறுத்தலாக மாறியுள்ள குள்ள மனிதர்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை, அனுராதபுரம், குளியாப்பிட்டியை தொடர்ந்து மஹவிலச்சிய பொலிஸ் பிரிவின் பல இடங்களில் இரண்டு மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டதாக பெண்கள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று தமது வீட்டிற்கு அருகில் இந்த இரண்டடி குள்ள மனிதனை அவதானித்ததாக சியம்பலாகஸ்வெவ பெண்களினால் தத்திரிமலை பொலிஸாரிடம் அழைப்பேற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளனர்.
உடனடியாக அந்த பகுதிக்கு பொலிஸார் சென்ற போதிலும் அவ்வாறான குள்ள மனிதர்களை அவதானிக்க முடியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் இந்த குள்ள மனிதர்களின் தாக்குதலினால் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இதனை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment