சாய்ந்தமருதுக்கு தனி நகரசபை கிடைக்குமா..? இன்றைய கூட்டத்திலும் இறுதி முடிவு இல்லை
சாய்ந்தமருது நகர சபைகள் பிரிப்பது தொடர்பாக ஆராய முவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
சாய்ந்தமருது தனியான நகர சபை அவசியம் என வலியுறுத்தி நீண்டகால போரட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இன்று(26) மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் கூடிய கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில் மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணர்களான ஏ.எல். நசீர், காலாநிதி இஸ்மாயில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர்கள் அடங்கிய குழுவொன்று அடுத்த மாதமளவில் கூடி மேலும் தீர்மாணம் எடுக்கப்படும். இக்குழு சம்பந்தப்பட்ட தரப்பினரை, கல்முனை ,சாய்ந்தமருது ஆகிய பள்ளிவாசல் குழுக்களையும் சந்தித்து முடிபு எடுக்கப்படும் என அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவிததர்
இன்று இது தொடர்பாக அமை;ச்சர் வஜிர ஆபேவர்த்தன தலைமையில் அவரது அமைச்சில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், றிசாட் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சர் எச்.எம். ஹறிஸ், பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ருப், பா.உ களான ஏ.எல் நசீர், எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment