புத்தளம் சமூக நலன்புரி இயக்கம் விடுத்துள்ள செய்தி
கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டுவரும் போராட்டத்தில் வெற்றி ஏற்படுமானால்அந்த வெற்றியில் எந்த ஒரு கட்சியோ தனி மனிதனிதனோ உரிமைகொண்டாட முடியாது என புத்தளம் சமூக நலன்புரி இயக்கம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில், புத்தளம் வாழ் மக்கள் மாத்திரமின்றி நாட்டில் உள்ள சூழலை நேசிக்கும் மக்களும் தமது ஆதரவை வெளிக்காட்டினர் என்றும் போராட்டங்களில் வெளியிடங்களிலிருந்து பலர் கலந்துகொண்டிருந்தனர் என்றும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குப்பைப்போராட்டம் வெற்றிபெற்றால் அதற்கு உரிமை கோருவதற்காக சில அரசியல் கட்சிகள் தற்போது அடித்தளம் போடும் வகையில் , வட்ஸ்ப் குழுமங்களிலும், முகநூல்களிலும் பிரசாரங்களை மேற்கொள்வதை கைவிட்டு இதனை ஒரு சமூக வெற்றியாக நோக்குமாறு அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. அப்போதுதான் எதிர்காலங்களில் இடம்பெறும் மனிதாபிமான போராட்டங்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம் பேதமின்றியும், கட்சி பேதமின்றியும், பிரதேச பேதமின்றியும் கலந்துகொள்ளும் ஒரு நிலை ஏற்படும் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு, சமூக ஒற்றுமையை உங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் மூலம் சீர்குலைக்க வேண்டாம் என உரிமையுடன் வேண்டுகின்ன்றோம்.
Post a Comment