Header Ads



அமெரிக்கருக்கு இலங்கையின் ஜனாதிபதியாக வரமுடியாது - மைத்திரியே தொடர்ந்தும் பதவியிலிருப்பார்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேறு எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படாது எனவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை இன்று -01- ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகிப்பார் எனவும் துமிந்த குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிலர் அமெரிக்க பிரஜை ஒருவரை இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர மேற்கொள்ளும் முயற்சியை ஏளனமாக பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Next President MY3??? You are dreaming.............

    ReplyDelete

Powered by Blogger.