சந்திரிக்கா போகவில்லை - மகிந்த சென்றார்...!!
இலங்கையின் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பங்கேற்கவில்லை.
இலங்கையின் 71ஆம் சுதந்திர தின நிகழ்வுகள் தற்பொழுது காலி முகத்திடல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமைகள் காரணமாக இருவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment