குத்பாக்களையும் அரசாங்கமே, தீர்மானிக்க வேண்டிய நிலைமை வருமா...?
நம்மைச் சூழ எழுகின்ற பிரச்சினைகளில் பெண்கள் தொடர்பிலான பிரச்சினைகள் அனேகம் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகள் வெளிச் சமூகத்தால் கிளறப்பட்டதன் பின்னரே அது தொடர்பிலான பத்வாக்கள் தேடப்படுகின்றன. பெண்களின் உடை தொடர்பான விடயம் இதில் முக்கியமானது. அது போல முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த வேளைகளில் இன்னும் பல விடயங்கள் பெண்கள் தொடர்பில் பேசப்பட்டன. பெண்ணின் திருமண வயது, மறுமணம், பலதார மணம் என ஏராளமான பெண்கள் பிரச்சினைகள் பேசுபொருளாகின. பெண்கள் கத்னா தொடர்பில் வெளிச் சமூகம் எழுப்பிய பிரச்சினையும் இன்னும் கிளறப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த வகையில் பெண்கள் தொடர்பான எமது உலமாக்களின் நிலைப்பாடுகளும் வேறு ஒரு புறத்தில் இருந்து பிரச்சினையைக் கிளப்பிக் கொண்டுதானிருக்கின்றன. பெண்கள் பற்றி குத்பாவொன்றில் உரையாற்றிய மௌலவி ஒருவர், பெண்கள் வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட வேண்டும் என்றுதான் மார்க்கம் சொல்கிறது, கணவன் வீட்டை விட்டு வெளியே போனதும் மனைவி வீட்டை மூடிவிட வேண்டும், மஹ்ரமல்லாத யாரும் வந்தால் அவள் குரலை மாற்றிப் பேச வேண்டும், மஹ்ரமல்லாத ஆண்களின் முன்னே வர வேண்டியிருந்தால் அவள் மாறு வேடம் பூண்டு வர வேண்டும், இப்படித்தான் மார்க்கம் சொல்லித் தந்திருக்கிறது என அந்த கண்ணியத்துக்குரிய மௌலவி அல்லாஹ்வின் நல்லடியார்களைப் பார்த்து பிரசங்கம் செய்தார்.
மார்க்கம் சொல்லித் தந்திருக்கிறது, மார்க்கம் இப்படித்தான் சொல்கிறது என்று இவர்கள் எந்த மார்க்கத்தைச் சொல்கிறார்கள்? அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் தானே! அப்படியானால் இவர்கள் சொல்லுகின்ற மதம் என்ன? மார்க்கம் சொல்கிறது, பெரியோர்கள் சொன்னார்கள் என்பதை விட இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதனை மக்கள் முன் வைப்பது தான் உலமாக்களுடைய பணியாக அமைய முடியும். பல வேளைகளில் மௌலவிமார்களே இப்படி மிம்பர் மேடைகளில் ஏறி மக்களைக் குழப்பியடிப்பதுண்டு.
இதற்கு முக்கிய காரணம், மௌலவிமார் தங்களுடைய இல்முடைய விடயத்தில் கவனமில்லாமல் இருப்பதுதான். கண்டி பிரதேசத்தில் குத்பா ஓதிய மற்றுமொரு மௌலவி ஷாபி மத்ஹப் தான் இஸ்லாம் என ஆணித்தரமாகக் கூறியுள்ளார். தும்பிக்கை தான் யானை என கதீப் சொல்ல, ஆமாம் ஆமாம் என ஊர் மக்களும் நம்பிக்கையுடன் சென்றிருக்கிறார்கள். மக்கள் எதனையும் கேட்டு விட்டுப் பேசாமல் சென்று விடுவார்கள் என்ற தைரியத்தில் பலரும் துணிச்சலாக உளறிக் கொட்டுகின்றார்கள். உலமாக்களை விமர்சிப்பது பெரும் பாவங்களில் நின்றும் உள்ளது என மற்றுமொரு மௌலவி குத்பா செய்கிறார். இனி மௌலவி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்காமல் மக்கள் என்ன செய்வது?
இவர்கள் எல்லாம் எப்படி மிம்பர் ஏறினார்கள், இவர்களுக்கெல்லாம் மார்க்கம் சொல்லிக் கொடுப்பதற்கான வழிவகைகள் என்ன? ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக ஜம்இய்யதுல் உலமா விண்ணப்பங்களைக் கோரியிருக்கிறது. சமூகத்தின் முன்வந்து மார்க்கத்தைப் பேசும் இந்த உலமாக்களுக்கு மார்க்கம் பற்றிய பயிற்சியையும் வழிகாட்டல்களையும் வழங்குவதற்கு ஜம்இய்யதுல் உலமா முன்னுரிமை வழங்கினால் என்ன? அகப்பைக்கு வருவதற்குக் கொஞ்சம் சோற்றை பானையில் போட்டால் என்ன ?
சமூகத்தில் உலமாக்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்கள்தான் சமூகத்தை இப்படிப் பிளவுபடச் செய்திருக்கிறது. இருக்கின்ற எல்லாப் பிரிவுகளிலும் உலமாக்கள் பிரிந்து போய் இருக்கிறார்கள். இந்தக் கருத்தையும் உலமாதான் சொல்கிறார், அந்தக் கருத்தையும் உலமா தான் சொல்கிறார். எல்லோருமே தான் சொல்வது தான் சரி என்பதற்கப்பால் அடுத்தவர்கள் சொல்லுவது பிழை என்றும் சொல்கிறார்கள். இதனால் எந்த உலமா சொல்வது சரி என்பது தெரியாமல் மக்கள் குழம்பிப் போகிறார்கள். கடைசியாக உலமாக்களின் மீது நம்பிக்கை இல்லாத நிலைக்கு வந்து விடுகிறார்கள்.
இது உலமாக்கள் மக்களுக்கு முன்னால் எழுந்து நிற்பதற்கு முன்னர் தான் சொல்லப்போகும் விடயத்தில் மார்க்கத்தின் தீர்ப்பு என்ன என்பதை ஆய்ந்தறிந்து கொள்ளாமையின் விளைவே. இதனால் சமூகம் குழம்பிப் போகிறது. உலமாக்கள் சொன்ன கருத்தை உண்மை என்று நம்பி அவர்கள் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு முன்னர் இந்தக் கருத்துக்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்ற போது, இது தான் இஸ்லாம் மார்க்கமா என்று இஸ்லாத்தையே கொச்சைப் படுத்துகின்றார்கள். இந்த நிலைமைக்கு இஸ்லாத்தை ஆளாக்கியது யாருடைய குற்றம்?
எனவே தாங்கள் மக்களுக்குச் சொல்ல வருகின்ற மார்க்கம் என்ன என்பதை மௌலவிமார் தெரிந்திருக்க வேண்டும். இஸ்லாம் சொல்லாத ஒரு மார்க்கத்தை மிம்பர்களில் முழங்குவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஹஜ் விவகாரம், பிறை விவகாரம், மத்ரஸா ஆரம்பித்தல் என எல்லாமே அரசாங்கத்தின் வசம் வந்து கொண்டிருக்கும் தொடரில் குத்பாக்களையும் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டிய நிலைமை வர முடியும்.
அபூ ஷாமில்
That is good in a sense,, No more Salafi indoctrination will be there
ReplyDeleteமத்கபை பின்பற்றும் மவ்லவிமாறை முதலில் பாலர் பாடசாலைக்கு அனுப்ப
ReplyDeleteவேன்றும்
சகோதரர் அபு ஷாமில்!
ReplyDeleteஏன் நீங்கள் உங்கள் உண்மையான பெயர், ஊர், அடையாளத்துடன் இந்த உங்கள் கட்டுரையை எழுதக் கூடாது ? உண்மையை உரக்க சொல்ல புனைப்பெயருக்குள் ஒளிந்து கொள்ள வேண்டியதில்லையே ?
நீங்கள் எழுதி இருக்கும் கட்டுரை 100 % தவறான தரவுகளை கொண்டது என நான் சொல்ல வர வில்லை. எனினும் எங்கோ, யாரோ, எப்போதோ சில உலமாக்கள் கூறிய விடயங்களை நீங்கள் ஒட்டுமொத்த இலங்கை உலமாக்களின் குத்பாக்களும் இவ்வாறு தான் இடம்பெற்று வருகின்றன என்பது போன்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
பெண்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று பேசும் அளவு பழைமைவாத சிந்தனை கொண்ட உலமாக்கள் இக்காலத்தில் இல்லை என நினைக்கின்றேன். தனியார் சட்டம் (அதில் பெண்களின் திருமணம், வயதெல்லை, வலி உள்ளிட்ட விடையங்கள்) பற்றி வெளிச்சமூகத்தால் கிளர பட்டதன் பின்புதான் அவை சம்பந்தமான பத்வாக்கள் தேடப் படுகின்றன என்று எழுதிலுள்ளீர்கள். தவறு. ஜம்மிய்யதுல் உலமா உள்ளடங்கிய குழுவிற்கும் சட்டத்தரணி சலீம் மர்ஸூபின் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல்கள் எப்போது ஆரம்பமானது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதற்கும் சில வருடங்கள் முன்பிருந்தே இவை சம்பந்தமாக ஜமிய்யத்துல் உலமா தமக்குள்ளே கலந்துரையாடல்களை செய்து சில வரைபுகளையும் பூர்த்தி செய்திருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா ?
முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் இருந்த குறித்த மஸ்அலாக்கள் சர்ச்சையாக்கப்பட்டு நேரடியாக இலங்கை அரசியல் சட்ட துரையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் காரணமாகவே வெளிச்சமூகம் (முஸ்லிம் அல்லாதோர்) அவற்றிற்குள்ளே மூக்கை நுழைவித்தனர். (நீங்கள் கூறுவது போல் வெளிச்சமூகத்தால் கிளர பட்டதன் பின்பு தான் உலமாக்கள் பத்வாக்களை தேட ஆரம்பித்தனர் என்பது மிகப் பெரும் தவறு. சர்ச்சைகள் உண்டாகாத்திருந்தால், இரு அணிகளாக பிரிந்திராதிருந்தால் வெளிச்சமூகத்தின் தலையீடு அங்கே துளியும் ஏற்பட்டிருக்காது. அவற்றை சர்ச்சையாக்கி இன்று வரை அவற்றினூடாக இலாபம் தேட, குளிர்காய முற்படுவோர் அள்ளாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.
எனவே தயவு செய்து தரவுகளை உறுதிப்படுத்திக் கொண்டு எழுத்தாக்கம் செய்யுங்கள். உண்மைகளை நன்கு அறிந்து
கொண்டே சமூக மயப் படுத்துங்கள்.
ஜzஸாக்கள்ளாஹ்.
ஷfபீக் zஸுபைர்.
Dear Brother well explained article. May Allah Almighty bless your work. Further, May Allah Almighty guide all our Imaam to do their Islamic preaching within the Quran and Sunnah.
ReplyDeleteஅபூ சாகிப் உனக்கு தெரியாததற்கு ஹசரத் பாத்திமா றலி அவ்வாறு தான் வெளியே சென்றார்கள். அவரின் தலை மயிரை அவர் வபாத்தாகும் வரை அவரின் பிள்ளைகள் கூட கண்டது இல்லை. உனக்கு மனைவியை, மகளை அலங்காரம் செய்து பாதையில் விட்டு, விற்று பிழைக்கவும், ஏய்து வாழவும் வேண்டும் என்பதற்காக சரியான மார்க்கத்தை சொல்பவர்களை பிழையாக்க முயற்சி செய்யாதே. அடுத்தவர் கேலி செய்வதற்காக மார்க்கத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் நீ உனது வீட்டில் சிலைகளை வைத்து வனங்கு, அதை விட்டு விட்டு மஸ்ஜித் களில் சிலைகளை வைக்க தந்திரம் பன்னாதே. உனக்கு இந்த வார்த்தை பிரயோகம் போதாது ஆனால் இந்த மீடியா உனக்கு சரியாக பதிலளிக்க உகந்தது அல்ல.
ReplyDelete