Header Ads



கொழும்பு - சிலாபம் பேருந்தில், இப்படியும் நடந்தது

கொழும்பு - சிலாபம் பேருந்தில் பயணி இளைஞன் ஒருவரினால் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

யாசகம் கேட்ட இளைஞனின் தொலைபேசி ஒலித்தமையினால் அங்கிருந்த பயணிகளுக்கு கோபம் அடைந்து தாக்கியுள்ளனர்.

குறித்த இளைஞன் தனது கழுத்தில் விளம்பரம் ஒன்றை தொங்கவிட்ட நிலையில் பஸ்ஸில் ஏறியுள்ளார்.

அந்த விளம்பரத்தில் “நான் ஒரு ஊமை. அப்பா உயிரோடு இல்லை. அம்மா சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். தங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றார். தங்கைக்கும் அம்மாவுக்கும் செலவு செய்வதற்கு எனக்கு உதவுங்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

பஸ்ஸில் பயணித்தவர்கள் 20, 50, 100 ரூபாய் என அவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளனர்.

இந்நிலையில் திடீரென குறித்த இளைஞனின் கையடக்க தொலைபேசி ஒலித்தமையினால் பயணிகள் கோபமடைந்து அவரது கழுத்தை பிடித்துள்ளனர். அதன்போது அவரது கழுத்தில் இருந்து ஹேன்ட்ஸ் பீரி ஒன்றும் காணப்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த பயணிகள், குறித்த இளைஞனை தாக்கி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளைஞன் தொலைபேசியில் பேசியவாறு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

Powered by Blogger.