கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வு, முஸ்லிம்களுக்கு ஒரு அவமானமாகும்...!!
-Jan Mohamed-
நான் பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவனாக நுழைந்த போது பகிடி வதைகளில் அவ்வளவு மாட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு சில வேளைகளில் மாட்டியதுண்டு. ஒரு நாள் பெரும் கூட்டமாக பத்து பேர் என்னை சுற்றி வளைத்து டிராகிங் செய்ய முற்பட்டார்கள். அந்த காட்டிக் கொடுப்பைச் செய்தவர் ஒரு முஸ்லிம். அது தான் வேதனை. எனது முகத்தில் மட்டும் மீசையும் சிறிய தாடியும் இருந்ததால் சீனியர் மாணவர்கள் நானும் சீனியர் என எண்ணும் விதமாக அங்கு நடந்து கொள்வேன். இருந்தாலும் ஒரு சில வேளைகளில் மாட்டியதுண்டு.
இரண்டாம் ஆண்டில் இருக்கும் போது எனது சக மாணவர்கள் பகிடிவதையில் கடுமையாக ஈடுபடும் போது அவர்களைக் கண்டித்து பரஸ்பர அறிமுகத்தை வேறு வழிகளிலும் செய்யலாம் என்று காட்டிக் கொடுத்தேன். திக்கு முக்காட வைக்கும் கேள்விகள், விடையளிக்க முடியாத கேள்விகளை கேட்டு விட்டு எனது பெயரையும் கூறிவிட்டு நான் அடுத்த முறை சந்திக்கும் போது எனது பெயரைச் சொல்ல வேண்டும் என்று கூறி விட்டு விடை பெறுவேன். இவ்வாறும் அறிமுகப் படுத்தலாம்.
இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் மாற்றுமத சகோதரர்களின் வரம்பு மீறலால் வாக்குவாதப் பட்டு ஒரு பகிடி வதையை நிறுத்தினேன். அதன் பிறகு தமிழ் பேசும் மாணவர்கள் மத்தியில் அடுத்த இரண்டாண்டுக்கு மோசமான பகிடி வதைகள் இடம்பெறவில்லை. அதனால் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையே இல்லையோ என்ற கேள்வி எழும் அளவுக்குச் சென்றிருந்தது. நான் காட்டிக் கொடுத்த விடை கூற முடியாத கேள்விகள் மூலம் மாணவர்கள் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். அன்று பழகியவர்கள் இன்றும் எம்முடன் பழகி வருகின்றனர். இரண்டு தசாப்தங்கள் கடந்தாலும் பெயரை ஞாபகம் வைத்துள்ளனர். இது தானே எமது நோக்கம். அகிம்சை வழி இருக்கையில் அடாவடித்தனம் எதற்கு?
கிழக்கு பல்கலைக் கழக நிகழ்வு முஸ்லிம்களுக்கு ஒரு அவமானமாகும். அதனை வீடியோ எடுத்துப் பதிவிட்டதும் தவறு. பள்ளத்தில் தேங்கி நிற்கும் ஊத்தை நீரை ஊற்றுவது பகிடியாக இருந்தாலும் அது பெரும் பாவமாகும். அதனை அவர்கள் தங்கள் மேலே ஊற்றிக் கொள்வார்களா? மேலும் பர்தா அணிந்த மாணவிகள் மீது இவ்வாறு தண்ணீர் அடிப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர் கற்றுக் கொடுக்கவில்லையா!
சுய ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளாத இவர்கள் இந்த கல்வியைக் கற்று என்னதான் பிரயோசனம்?
இனிமேலாவது சிந்தித்து நடங்கள்.உங்களுடைய அடுத்த சந்ததிக்கு நல் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். நல்ல முறையில் அறிமுகமாதல் எப்படி என்பதை காட்டிக் கொடுங்கள். இஸ்லாமிய முறையில் ஸலாம் கூறுங்கள் முஸாபஹா செய்யுங்கள். பரஸ்பரம் கதையுங்கள். அதுதான் நல்வழி!
வீட்டில் குளிக்காமல் வந்தவர்களுக்கு மட்டும் தான் தண்ணி ஊத்தியிருப்பார்கள்.
ReplyDeleteDear இனவாதிகளே, ராக்கிங் காலப்பகுதியின் கடைசி நாளன்று தண்ணீர் மாணவர்கள் மேல் இலங்கையின் சகல பல்கழைகளகத்திலுமுள்ள நடைமுறை (எழுந்தாத சட்டம் - ராங்கிங் கலாச்சாரம்)