"கைதான மாணவர்கள், குற்றத்தை ஒப்புக் கொண்டனர்"
- Raazi Muhammeth Jabir -
இன்று -05- நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் பொலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான குற்றங்களை தாங்கள் செய்ததாக ஒப்புக் கொண்டு ஒவ்வொருவரும் 52000 தண்டப்பணம் கட்டி இப்பொழுது வெளியாகி இருக்கின்றனர்.
குற்றத்தை ஒப்புக் கொண்டு தலை குனிந்து வருவதற்காகவா இத்தனை கூப்பாடும்?
குற்றத்தை ஒப்புக் கொண்டு வருவதற்காகவா சஜித் பிரேமதாசவிடம் இந்த அரசியல் தலைவர்கள் பேசினார்கள் என்று சொன்னது??
52000 தண்டம் கட்டி வெளிக்கொணர்வதற்காகவா ஹரீஸ் அவர்களைச் சிறையில் சந்திக்கச் சென்றது?
கவலைப்படாதீர்கள்.குற்றத்தை ஒப்புக் கொண்டு வாருங்கள்,உங்கள் வாழ்க்கை அழியட்டும் என்று சொல்வதற்காகவா இந்த அரசியல்வாதிகள் பந்தாக் காட்டியது??
ஆம்.உங்கள் மதச் சின்னங்களை அவமானப்படுத்திவிட்டோம் முஸ்லிம்கள் நாங்கள். நாங்கள் புகைப்படம் எடுத்தது மாபெரும் தவறு.எங்களை மன்னித்தருளுங்கள் என்று செய்யாத குற்றத்திற்கு நீங்கள் மண்டியிடுவதைப் பார்ப்பதற்காகவா சமுகத்தில் இருக்கும் அத்தனை பைத்தியக்காரர்கள் நாங்கள் குரல் கொடுத்தது??
குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பதற்காகவா சட்டத்தரணிகளை கொழும்பில் இருந்து வரவழைத்தது?
யுவர் ஆனர் ஆம் எனது கட்சிக்காரர் குற்றத்தை ஒப்புக் கொள்கிறார் என்ற ஒரு வார்த்தைக்கு திறமையாக வாதாடி வெற்றி பெறல் என்று பெயர் வைத்தது யார்?
சட்டத்தரணிகளின் வாதத்திறமையால் பிணை வழங்கப்பட்டது என்று பச்சப் பொய்யை எழுதுகிறார்கள். பிணையல்ல. குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டப் பணம் கட்டி வெளியே வந்திருக்கிறார்கள்.
அதாவது களவெடுக்காதவன் களவெடுத்தேன் என்று ஒப்புக் கொண்டு வருவதைப் போல,கொலை செய்யாதவன் கொலை செய்தேன் என்று ஒப்புக் கொள்வதைப் போல, மதச்சின்னங்களை அவமானப்படுத்தாதவன் அவமானப்படுத்தினேன் என்று ஒப்புக் கொண்டு குற்றப்பணம் கட்டி வெளியே வருவதில் என்ன பெருமை இருக்கிறது?
இந்த அரசியல்வாதிகளுக்குப் பின்னால் போவது எத்தனை வீண் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த சஜித் பிரமதாச,ஹரிஸ்,ரிஷாட் பதியுதீன்,ரவுப் ஹக்கீம் படம் காட்டித்திரியும் நடிகர்களன்றி வேறில்லை.எந்தக் குற்றமும் செய்யாத இருபது வயது மாணவர்களை வெளிக் கொணர முடியாத அரசியல்வாதிகள்தான் இவர்கள்.
தலைவரின் தலையீட்டால் வெளிவந்தார்கள் மாணவர்கள் என்று அவர்களின் அல்லக்கைகள் எழுதும்போதுதான் இருப்புக் கொள்வதில்லை.
எமது நிலையை நாம் எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோமோ தெரியாது.
உண்மை யான கருத்துக்கள்..
ReplyDelete@JM, தனது பெயரை இதில் சேர்க்கவில்லை என நடிகர் திலகம் ஹிஸ்புல்லா கோவிக்கபோகிறாரு.
ReplyDeleteஇவரு சுதந்திர தினத்தன்று மழையில் நின்று over acting செய்தாராம்.
All can act in this Dunya (World) only. no escape from Allah almighty.
ReplyDeleteThey had only two choices. One is coming out with 52000 thousand fine minus finger prints other was SAYING NOT GUILTY and facing unending political vendetta and proceedings. If the 1st choice better say thanks to the politicians and lawyers appeared for them
ReplyDeleteThey have done false. They have to agreed.
ReplyDeleteThose who put bomb to destroy this country..talking about independence day. Feel shame on you
ReplyDeleteneega 1 news poduringa..bt innoru newsla janadipathy pothu mannipu kuduttha maathiri 1...bt 1m puriyala..mr jabir..ur writer bt etha elutha sonnalum eluthuwatha?.? intha waaliparhal educate people bt konjam decepline very important...seyyatha kuttram oppokondaarhal enru sonneerhal ..athu enna kutram...theliwa podunga...itha wacchi neenga arasiyal laafam kaana wenam ....
ReplyDeleteவண்டிலுக்குக் கீழால் செல்லும் நாய் போல தமிழருக்கு ஒரு அஜன்.
ReplyDeleteதவறுதலாகவேனும் மாணவர்கள் குற்றம் செய்தது தான் யதார்த்தம்.
ReplyDeleteபிணையாவது கிடைக்காதா என்று தான் ஏங்கிக் கொண்டிருந்தோம்
மட்டரகமாக சிந்திப்பதை நிறுத்துவோம்.
ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரியாக இருப்போம்.
யதார்த்தங்களை ஏற்றுக் கொள்வோம்.
குற்றவாளிகளை காப்பாற்றுவதும் அரசியல்வாதிளின் கடமை என்ற நிலைப்பாட்டை கைவிடுவோம்.
நலவு செய்தவர்ளுக்கு நன்றி சொல்வோம்.
சிறந்ததொரு நாகரிகத்தின் வாரிசுகள் நாம் என்பதை மறவாதிருப்போம்
thavarhalai seyyaml iruppathe muslimin adayalam muslimin adayalam muslimukku pirachhinai endral arasiyal vaathikalai nambuvathai vida allahvai mulumayaha nammbungal vettri eeman kondavarukke
ReplyDelete