குடும்பத்தினரை துணிச்சலுடன், காப்பாற்றிய வீரச் சிறுவன்
அரலங்கவில - அளுத்வெவ பகுதியில் இசட் டி கால்வாயில் முச்சக்கரவண்டியொன்று விபத்திற்குள்ளான நிலையில் அதில் சிக்கியிருந்த தமது தந்தை, சகோதாரி மற்றும் சகோதரனையும் அதே குடும்பத்தை சேர்ந்த மூத்த சகோதரர் காப்பாற்றியுள்ளார்.
குறித்த சிறுவன் பாடசாலை முடிவடைந்து தனது தந்தை, ஐந்து மாதங்களான தங்கை மற்றும் தம்பியுடன் வீடு திரும்பி கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது நீரில் மூழ்கவிருந்த மூவரையும் குறித்த சிறுவன் மீட்டுள்ளார்.
சசிந்து லக்ஸான் ஜயகொடி என்ற 10 வயதான பாடசாலை மாணவரே இந்த துணிச்சலான செயலை மேற்கொண்டு மூவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார்.
Exceptional courage.. Need a national level recognition
ReplyDeleteExcellent Boy...
ReplyDelete