தூள்கார்கள், தூள் முதலாளிகள், குற்றவாளிகள், திருடர்கள் இருக்கும் ஒரே இடம் பாராளுமன்றம்தான்
தூள்கார்கள், தூள் முதலாளிகள், குற்றவாளிகள் மற்றும் திருடர்கள் இருக்கும் ஒரே இடம் நாடாளுமன்றம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை வெலிகமை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற முன்னணியின் தொகுதி அதிகார சபைக் கூட்டத்தின் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஊடகங்களுக்கு இந்த நிலைமையை மாற்ற முடியும் என்று சிலர் நினைக்கலாம். அது அப்படியல்ல. எமக்கும் அவர்களுக்கும் இடையில் இருப்பது அரசியல் கலந்துரையாடல்.
அந்த கலந்துரையாடலை ஊடகங்கள் வழியாக கொண்டு செல்ல முடியாது. தற்போது ஊடக கலாசாரம் ஒன்று உருவாகியுள்ளது. சிறிய மோதலான சம்பவங்கள் தான் ஊடகங்களுக்கு தேவைப்படுகிறது.
ஊடகங்களில் சிறிய விடயங்கள் பெரிதுப்படுத்தப்படுகின்றன. இதனால், எந்த தலைப்பு செல்ல வேண்டும் என்று ஊடகங்களே தீர்மானிக்கின்றன.
அந்த ஊடகங்களுக்கு அரசியல் இருக்கின்றது. சில ஊடகங்களை அரசியல் கட்சிகள் விழுங்கியுள்ளன.இதனை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். இதனால், எமது செய்திகளில் ஒரு துளியை மட்டுமே ஊடகங்கள் வாயிலாக கடத்த முடியும்.
தூள் பயன்படுத்துவர்களை நாம் தூள்காரர்கள் என்போம். தூள் விற்பனை செய்பவரை தூள் முதலாளி என்று கூறுகிறோம்.
குற்றங்களை செய்யும் போது, திருடும் போது பாதாள உலக குழு என்போம். தூள்காரர்கள், தூள் முதலாளிகள், திருடன்,பாதாள உலக குழுவினர் நாடாளுமன்றத்தில் ஒரே இடத்தில் உள்ளனர்.
இந்த அரசியல் அந்த இடத்தை நோக்கியே செல்கிறது. கொக்கேய்ன் பயன்படுத்தி விட்டு, சில அமைச்சரவை பத்திரங்களை நிறைவேற்றுகின்றனரோ தெரியவில்லை.
இப்படியானவர்களின் நாட்டின் ஆட்சியை கையளிக்க வேண்டுமா?. நாட்டுக்கு தற்போது அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியினால் மட்டுமே அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment