Header Ads



குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, பிரகாசமுள்ள மின்குமிழ் பொருத்தும் வேலைத்திட்டம்

- பாறுக் ஷிஹான்  -

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த  பிரகாசமுள்ள  விஷேட மின்குமிழ் பொருத்தும் வேலைத்திட்டம் யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களில்   பொருத்தப்பட்டு வருகின்றன.

 ஐக்கிய தேசிய முன்னணி கட்சியின் (UNA) யாழ் மாநகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட தலைவருமான கே.எம் நியாஸின் (நிலாம்) முயற்சியின் பலனாக யாழ் சோனகத்தெரு கல்லூரி வீதி லெயிடன் சந்தி பொம்மைவெளி நாவாந்துறை போன்ற பகுதிகள் இம்மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு புதுப்பொலிவுடன் ஒளிர்கின்றன.

 அண்மைக்காலமாக இப்பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்பட்டமையினால் குற்றச்செயல்ள் அதிகரித்திருந்தன.
தற்போது இக்குற்றங்களை  தடுக்கும் முகமாக வீதிக்கு வீதி  அதி வலுக்கூடிய   வீதி விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன . 

இம்மின்குமிழ் பொருத்தும் செயற்பாட்டை யாழ் . மாநகர சபையின் பிரதி  முதல்வர் ஈசன்  மாநகர சபை உறுப்பினர் நிலாம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான  ரிஷாத் பதியுதீனின் மேற்குறித்த    நிதி ஒதுக்கீட்டின் கீழ் விஷேட மின்குமிழ் பொருத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு   யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகள் அதிக வலுவுடைய மின்குமிழ்கள் தற்போது பொருத்துவதற்கு உதவிய  மாநகர சபை உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள்  நன்றி  தெரிவித்துள்ளனர்.



No comments

Powered by Blogger.