சிறிய குழந்தை தற்போது, நான்கரை லட்சம் ரூபாய் கடனாளி
நாட்டு மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதால், இம்முறை சுதந்திர தின வைபவத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிய குழந்தை தற்போது நான்கரை லட்சம் ரூபாய் கடனாளியாக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு சுதந்திரம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அங்குகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் கமத்தொழிலில் ஈடுபடும் குடும்பங்களுக்கு பழம் மற்றும் காய்கறி செடிகளை வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் ஆட்சி செய்த அரசாங்கத்திற்கும் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண முடிந்தது என்று நான் நினைக்கவில்லை.
அப்படி அடையாளம் கண்டிருந்தால், மக்கள் இந்தளவுக்கு வறிய நிலைக்கு சென்றிருக்க மாட்டார்கள். நாடு சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
நான் சுதந்திர தின வைபவத்தில் கலந்துக்கொண்டவன். ஆனால், இம்முறை கலந்துக்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளேன். நாட்டு மக்கள் சுதந்திரமடையவில்லை என்றால், சுதந்திர தினத்தை கொண்டாடி பயனில்லை. வெள்ளைகாரனிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம்.
வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் பெற்று கறுப்பு வெள்ளையன் ஆட்சிக்கு வந்தான். ஆனால் வெள்ளைகாரனின் ஆட்சிக்காலத்தை விட மக்கள் பல துறைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடனை செலுத்த நாட்டின் தேசிய வருமானம் போதவில்லை. அரசாங்கம் தமக்கு ஏதாவது செய்யும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாடு தற்போதுள்ள நிலைமையில் இருந்து முன்னோக்கி சென்றால் மட்டுமே நான் சுதந்திர தினத்தை கொண்டாடுவேன் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment