கண்டி + கல்முனை முஸ்லிம்களே, இது உங்களின் அவதானத்திற்கு...!
சவூதி அரேபிய அரசாங்கத்தின் சட்டத்தின் கீழ் இலங்கையிலிருந்து ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை மேற்கொள்பவர்கள் தங்களது கைவிரல் அடையாளங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான நிலையங்கள் கொழும்பு மற்றும் கண்டி, கல்முனை ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டிருந்தாலும் நாடெங்கிலுமிருந்து ஹஜ், உம்ரா பயணிகள் தங்கள் கைவிரல் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கொழும்புக்கே வருகிறார்கள். இதனால் இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் கண்டி, கல்முனை கிளை நிலையங்களை மூடிவிடுவது பற்றி ஆலோசித்து வருகிறது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.
கண்டி, கல்முனையில் இயங்கிவரும் நிலையங்களில் மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஹஜ், உம்ரா பயணிகள் கண்டி, கல்முனை நிலையங்களிலே தங்களது கைவிரல் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
முகவர்களும் இது தொடர்பில் பயணிகளை அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பு வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள நிலையத்தில் பெருமளவிலானவர்களுக்கு இடவசதி, இருக்கை வசதி என்பன இல்லாமை தொடர்பாக தெரிவிக்கப்பட்டுவரும் முறைப்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில் கைவிரல் அடையாளங்களை உறுதிப்படுத்தும் சவூதி அரேபியாவின் இலங்கை முகவராக VFS TASHEEL SL (Pvt) Ltd Supun நிறுவனம் செயற்படுகிறது. இது வெள்ளவத்தையில் அமைந்துள்ளது. இங்கு பெருமளவிலானோருக்கு இடவசதியற்றது.
இதனைக்கருத்தில் கொண்டே இதன் கிளைகள் கண்டியிலும் கல்முனையிலும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அக்கிளைகளின் சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கண்டி மற்றும் கல்முனை நிலையங்களில் ஹஜ், உம்ரா பயணிகள் சேவையைப்பெற்றுக்கொள் ளாதவிடத்து அந்நிலையங் களை மூடிவிடுவதாக சவூதி தூதரகம் தெரிவித்துள்ளது என்றார்.
-Vidivelli
Post a Comment