பதுளை வைத்தியசாலையில் நடந்த, அபூர்வ சத்திர சிகிச்சை
பதுளை வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று முதல் முறையாக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோயாளிக்கு இரண்டு சீறுநீரகத்திலும் காணப்பட்ட 6 கற்கள் வயிற்றை வெட்டாமல் நீக்கப்பட்டுள்ளன.
4 மில்லி மீற்றர் நவீன இயந்திரம் ஒன்றின் மூலம் சிறுநீரகத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் இந்த கற்கள் நீக்கப்பட்டுள்ளன.
குறித்த கற்கள் தூளாக்கப்பட்டு (PCNL முறை) 3 சத்திர சிகிச்சைகள் ஒரே முறையில் மேற்கொள்ளப்பட்ட அரிய சந்தர்ப்பம் பதுளை வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
48 வயதான பெண் ஒருவரே இந்த விசேட சத்திர சிகிச்சைக்கு முகம் கொடுத்துள்ளார். சத்திர சிகிச்சையின் பின்னர் நோயாளி ஆரோக்கியமாக இருப்பதாக விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.
This is not a rare surgery ... one of the most common procedure, PCNL for renal stones in the field of urology.
ReplyDelete