ரஞ்சனுக்கு எதிராக, கொந்தளிக்கும் நாமல்
ஐக்கிய தேசியக் கட்சி அரசியலையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் குழப்பிக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலையில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினரை மற்றவர்கள் எந்தளவுக்கு தனிப்பட்ட ரீதியில் விமர்சித்து சேறுபூசினாலும் அவர்கள் மீது தனிப்பட்ட ரீதியில் கோபம் இல்லை. அது அரசியல் ரீதியான விமர்சனம் மட்டுமே எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை அர்ஜூன் அலோசியஸ், ராஜபக்ச குடும்பத்தின் திருமணத்தில் கலந்துக்கொண்டதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தமை குறித்து செய்தியாளர் ஒருவர், நாமலிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், “ எங்கள் வீட்டுக்கு வந்து செல்பவர்கள் பற்றி கேட்பதற்கு ரஞ்சன் ராமநாயக்க எங்களது மாமனார் அல்ல” என தெரிவித்துள்ளார்.
மாமாவின் வேலையை பார்க்காது அர்ஜூன் மகேந்திரன் ஒழிந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்தால், நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கையாது முடிவுக்கு கொண்டு வர முடியும்.
ரஞ்சன் ராமாநாயக்க தனது தொழிலை செய்வதற்கு பதிலாக மாமாவின் தொழிலை செய்வதால், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே அவருக்கும் ஏற்பட்டது.
அர்ஜூன் அலோசியஸ் அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறிவிடுவார் என்ற அச்சத்தில் ரஞ்சன் ராமாநாயக்க இப்படியான கருத்தை வெளியிட்டிருக்கலாம் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரஞ்சன் ராமாநாயகே கொஞ்சம் அளவிற்கு அதிகமாக தான் ஆடுகிறான். இவன் கொஞ்சம் அடக்கி வாசிப்பது தான் நல்லது
ReplyDelete