Header Ads



கண்டிய மக்கள் முஸ்லிம்களை தமது இன பந்துக்களாக ஏற்று பெண்களை மணமுடித்தும் வைத்துள்ளனர்

-JM. Hafeez-

சிறுபான்மை இனங்களை அரவனைத்து அவர்களுக்கு உபசரிப்புக்களை வழங்குவது கண்டி மக்களது பாரம்பரியமே அன்றி அது மெதமுலானையில் இருந்து வந்த ஒன்றல்ல என்று அரச முதலீட்டு, கண்டி அபிவிருத்தி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். (23.2.2019) 

வத்துகாமம் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். பாத்ததும்பறைத் தொகுதிக்கு ஐ.தே.க.யால் புதிய அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற அங்கத்தவரும் முன்னாள் மத்திய மாகாண சபை அங்கத்தவருமான திலின பண்டார தென்னகோன் அவர்களை வரவேற்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்திலே இவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

கண்டிய மக்களுக்கென்று (மேல்நாட்டு) சில பாரம்பரியங்களும் சமய கலாச்சார பின்னணிகளும் உண்டு. அதில் பௌத்தர்களது புனித இடமாகக்  கருதப்படும் ஸ்ரீ தலாதா மாளிகை முக்கியமானதாகும். இது சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்ற ஒன்று. எனவே கொழும்பிலிருந்து கண்டிக்கு வருவதற்கான விரைவான பாதை ஒன்று தேவை. இலங்கையில் எங்காவது ஒரு அதிவேக வீதி அமைக்கப்பட வேண்டுமாயின் அது கண்டி - கொழும்பு அதிவேக வீதியாகத்தான் இருக்க வேண்டும். அதன் பிறகு ஏனைய இடங்களான காலி, மாத்தறை போன்ற இடங்களுக்கு  அமைக்க முடியும். 

ஆனால் கடந்த ஆட்சியில் காலி, மாத்தறை மட்டுமல்ல, கண்டியை புறம் தள்ளி விட்டு பெலியத்தைக்குக் கூட அதிவேக வீதி அமைக்கப்பட்டது. இது கண்டி அபிவிருத்தித்துறையில் கைவிடப்பட்டமைக்கு முக்கிய உதாரணமாகும். ஆனால் கண்டி மக்கள் அப்படியானவர்கள் அல்ல. சகல இனங்களையும் அரவனைத்துச் செல்லும் பாரம் பரியத்தைக்கொண்டவர்கள். அண்ணிய நாடுகளின் படையெடுப்புக்களின் போது கரையோர மாவட்டங்களில் இருந்து விரட்டப்பட்ட இஸ்லாமிய, கிருஸ்தவ மற்றும் சிறுபான்மை இன மக்களுக்கு கண்டிய மன்னர்கள் புகழிடம் அளித்தார்கள். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் தாராளமாக உள்ளன. அதனைவிட கண்டிய மக்கள் முஸ்லிம்களை தமது இனபந்துக்களாக ஏற்று பெண்களை மணமுடித்தும் வைத்தனர். இன்று கூட கண்டிய முஸ்லிம்கள் சிங்கள பரம்பரைப் பெயர்களை(வாசகம) பயன்படுத்தி வருகின்றனர்.

எமது அரசைப் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழர்களுடன் இணைந்து நாட்டைக் கூறு போடப்போகிறோம் என்பதாகும். சில மாதங்களுக்கு முன் நாட்டில் சட்டவிரோத அரச ஒன்று ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தது. அத்துடன் அன்று ஜனநாயகம் மீறப்பட்டது. அச்ந்தர்ப்பத்தில் ஜனநாயகத்தை பாது காக்க எம்முடன் இணைந்தவர்கள் சிறுபான்மை கட்சியினராகும். சட்டவிரோத அரசு ஆட்சியைக் கைப்பற்ற முடியாத வாறு தடுத்து எமது அரசைப் பாது காத்தவர்கள் சிறுபான்மை கட்சினராகும். அரசியல் அமைப்பை பாதுகாக்க பக்கபலமாக இருந்தவர்கள் அவர்கள்தான். எனவே அவர்களுடன் இணைந்திருப்பதில் என்ன தவறுள்ளது எனக் கேட்க விரும்புகிறேன். 

அரசியல் அமைப்பு நிர்ணய சபை ஒன்றை அமைப்பது தொடர்பான பிரேரனை ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு பாராளுமன்றமே சகல கட்சிகளையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் அரசியல் அமைப்பு சபையை நிறுவியது. பல சந்தர்ப்பங்களில் அது கூடி ஒரே ஒரு விடயத்தை மட்டுமே திரும்பத் திரும்ப ஆராய்ந்தது. அதுதான் மாகாண சபைகளை எவ்வாறு சக்தி உடையதாக்குவது என்பது. இது வடக்கு அல்லது கிழக்கு மாகாண சபையை மட்டுமல்ல, நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளையும் வலிமை கொண்டதாக மாற்றுவது பற்றியே பேசப்பட்டது. அவ்வாறு பேசப்பட்டு அதன் பின்னர் எடுக்கும் முடிவுகள் பாராளு மன்றத்திற்கே சமர்பிக்கப்படும். பாராளு மன்றம் விரும்பினால் மட்டுமே அது அமுலாக்கப்படும். இதுவல்லாது சிலர் நினைத்த மாதரி யாருக்கும் எதனையும் தாரை வார்க்க முடியாது. நிலைமை இப்படி இருக்க எம்மைப்பற்றி திரித்துக் கதை கூறுவது பொருந்தாது. 

எனது 30 வருட பாராளு மன்ற அனுபவத்தை வைத்துக் கூறுகிறேன். பாராளு மன்றில் கொக்கைன் போதைப் பொருள் பாவிக்கும் எவரும் கிடையாது. அதே நேரம் சிகரட் கூட புகைகாத எம்.பி. களும் சபையில் உள்ளனர். 

1971ல்  ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா அம்மையார் அவர்களும்  1987ல் ஜே.ஆர் ஜயவர்தனா அவர்களும் சுதந்திரத்தின் பின் அரசியல் அமைப்பை மாற்றியுள்ளனர். இதில் இரு சந்தர்பஙகளிலும் தமிழ் கட்சிகள் ஆதரிக்கவில்லை. வெளி நடப்புச் செய்துள்ளனர். ஆனால் நாம் தயாரித்து வரும் புதிய அரசியல் சீர் திருத்தங்களுக்கு அவர்கள் வெளி நடப்பு செய்ய வில்லை. எனவே இலங்கை வரலாற்றில் முதன் முதலாக தமிழ் கட்சிகளின் உதவியுடன் நிறைவேற்றப்பட உள்ள அரசியல் மாற்றங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே ஒழிய அதனை எதிர்பதில் பயன் இல்லை. 

கடந்த மூன்றரை வருடங்களாக எமக்கு அரசியலில் சுயமாக இயங்கு முடியாது போனது. பல சந்தர்ப்பங்களில் எமது காலை வாரி விட்டார்கள். எனவே தொடர்ந்தும் நாம் முற்றும் துரந்த முனிவர் வேடம் போட முடியாது. அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அதில் எமது கூட்டணி சார்பாக ஐ.தே.க சேர்ந்த ஒருவரே நிறுத்தப்படுவார். 

எமது அரசு பல சேவைகளை பொது மக்களுக்கு இதுகால வரை புரிந்துள்ளது. சமுர்தி நிவாரணம்,  அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு, பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி போன்றன கண்ணுக்கு புலப்படாத சேவைகளாகும் உதாரணமாக எந்த ஒரு பாடசாலை மாணவனும் ரூபா 2 இலட்சத்திற்கு தனியார் வைத்திய சாலையில் இலவசமாக  சிகிட்சை பெற முடியும். 

இந்திய மக்கள் சுதந்திரத்தின் பின் இந்தியர் என்ற கோட்பாட்டையே வளர்த்தனர். நாமோ அதனை கைவிட்டு தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற கோட்பாட்டையே வளர்த்துள்ளோம். இதுவே எமது நாடு பின்னடைவுக்குக் காரணமாகியது. எனவே நாம் இலங்கையர் என்ற கொள்கையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.இன்னும் பலர் உரையாற்றினர்.   

2 comments:

  1. All UNP are the Drug Dealer. That why they did not catch any one in this period. Now the Power is in President hand and he is catching many Drug dealers. What can you say about this?

    ReplyDelete
  2. once upon a time, Muslims were very important for Kandyan kings. Their conducts and patriotism attracted Kings and the hamlets. Thats what they gave their girls to Muslims not only honor them but also mix them into their cultural environment. Even now, 99% of Sinhalese Buddhists respect Muslim peasantry for their long-time relationship with Sinhalese.

    ReplyDelete

Powered by Blogger.