கிரிக்கெட் வீரர்களுக்கு, பேஸ்புக்கிலிருந்து நீங்கிக்கொள்ள அறிவுரை
தேசிய அணியில் பங்குகொள்ளும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களிலிருந்து தங்களை நீக்கிக் கொண்டால் அவர்களினால் அழுத்தங்கள் இன்றி விளையாட்டில் பங்குகொள்ளலாம் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டுக்கு வீரர்களைத் தெரிவு செய்யும் போது ஏற்பட்ட பிரச்சினைகள்தான் கடந்த காலங்களில் கிரிக்கெட்டில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்குக் காரணமாக காணப்பட்டது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment