அதிவேக நெடுஞ்சாலைகளில் கார்ட் மூலம் கட்டண அறவீடு
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இலத்திரனியல் கார்ட் மூலமான கட்டண அறவீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகளுக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் சமன் ஓபநாயக்க தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் தற்போது பணம் மூலமாக கட்டணங்கள் அறவிடப்படுகின்றது. இதனை இலத்திரனியல் கார்ட் மூலம் அறவிடுவதே எதிர்கால நோக்கமாகும் என்றும் இதற்கிணங்க அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இந்தமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலத்திரனியல் கார்ட் மூலம் கட்டணம் அறவிடும் நடைமுறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுளள போதும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மட்டுமே அந்த செயற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இதனை அனைத்து நெடுஞ்சாலைகளுக்கும் விஸ்தரிக்கப்போவதாகவும் இதன் மூலம் மக்கள் மேலதிக வசதிகளையும் இலாபத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment