Header Ads



கப்பம் கேட்டவனுக்கு, விழுந்த அடி - கீழே தள்ளி உதை (வீடியோ) - காலியில் துணிகரம்

காலி பிரதான வீதியில் கடிகார விற்பனை நிலையம் ஒன்றில் கப்பம் பெற முயற்சித்த நபர் கடை உரிமையாளரால் தாக்கப்பட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். 

நேற்று (27) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. 

குறித்த நபர் காலி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் அடிக்கடி கப்பம் பெற்று வருவதாகவும், அதன்படி நேற்று குறித்த வர்த்தக நிலையத்திலும் கத்தியை காண்பித்து கப்பம் பெற முயற்சித்துள்ளார். 

சம்பவத்தில் காயமநை்த நபர் கராப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

1 comment:

  1. Excellent work of the business man. But always first we have to protect our self before attacking.

    ReplyDelete

Powered by Blogger.