Header Ads



தாராக்குடிவில்லுவின் முதல் பல்கலைக்கழக, பட்டதாரி கௌரவிக்கப்பட்டார்


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றும் ஜுனைத் எம். ஹாரிஸ் அவர்கள் புத்தளம் மாவட்டத்தின் தாராக்குடிவில்லு எனும் பிரதேசத்தில் பிறந்ததோடு அவ்வூரின் முதல் பல்கலைக்கழக பட்டதாரியாகவும் இவரே விளங்குகின்றார்.

இவரது திறமைக்கான பரிசாக கடந்த வாரம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவின் பணிப்பாளர் பதவி வழங்கி வைக்கப்பட்டது.

இப்பதவியானது சுமார் 94 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழ் பேசும் ஒருவருக்கு வழங்கப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்கது.
மேலும் ஜுனைத் எம். ஹாரிஸ் அவர்களை கௌரவிப்பதற்காக அவரது சொந்த ஊரான தாராக்குடிவில்லுவில் நேற்று 23.02.2019 மாலை 3.00 மணியளவில் வரவேற்பு விழா ஒன்று ஊர்மக்களால் மிகவும் விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்நிகழ்வில் உலமாக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், மற்றும் ஏறாலமான பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

No comments

Powered by Blogger.