ரணில் - ஹக்கீம் அவசர சந்திப்பு, அலிசாஹர் மௌலானாவும் உடனிருந்தார்
தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கின்றமை தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் அலி சாயிர் மௌலானா ஆகியோர் கலந்துக்கொண்டிருந்ததாகவும் அந்த உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் வகையிலான யோசனை அடங்கிய ஆவணமொன்றை, சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, சநாடாளுமன்ற செயலாளரிடம் நேற்றைய தினம் கையளித்திருந்தார்.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிம் இணைந்தே, தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சி குற்றச்சுமத்தப்படுகின்றது.
இந்த பின்னணியில், இன்று இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இந்த சந்திப்பு கொழும்பு அரசியலில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.
Post a Comment