Header Ads



கிரிக்கெட் பற்றி, ரணில் தெரிவித்தவை

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து அரசியலை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் இந்தியாவில் கூட கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் இல்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

நான் வந்துக்கொண்டிருந்த போது எமது கிரிக்கெட் அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது என்று எனக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. இரண்டு போட்டிகளில் வென்றமைக்காக நான் இலங்கை கிரிக்கெட் அணியை பாராட்டுகிறேன். கிரிக்கெட் போட்டிகளில் நாம் தோல்வியடைவோம் என்ற கருத்தே நாட்டில் பிரபலமாக காணப்பட்டது.

உண்மையில் அரசாங்கமும் அதேபோல் விழ சந்தர்ப்பம் இருந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிக்கு ஜனாதிபதி ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு கேட்டார். நான் யாரை நியமிக்கலாம் என்று யோசித்தேன்.

கட்சி தோல்வியடையும் போது அதனை மீட்கும் பொறுப்பை பதுளைக்கு வந்து ஹரின் பெர்னாண்டோவிடம் கொடுத்தேன். அதேபோல் கிரிக்கெட்டையும் அவரிடம் ஒப்படைத்தேன்.

இவை இரண்டையும் மீட்டால் மட்டும் போதாது. எப்படியாவது கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து அரசியலை வெளியேற்ற வேண்டும். அந்த காலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் இருக்கவில்லை.

இந்தியாவில் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் எந்த பிரச்சினைகளும் இன்றி கிரிக்கெட்டில் இருக்கின்றனர். நான் சிறுவனாக இருந்த போது லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் என்.எம். பெரேரா கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்தார்.

அதற்கு பின்னர் டட்லி சேனாநாயக்கவின் சகோதரர் றொபர்ட் சேனாநாயக்க தலைவராக இருந்தார். அதற்கு பிறகு எமது காமினி திஸாநாயக்க இருந்தார்.

அரசியல் தலையீடுகள் இன்றி உருவாக்கப்பட்ட கிரக்கெட்டில் அரசியல் புகுந்து கொண்டமை குறித்து விசேட ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் நாம் மிகவும் வருத்தப்படுகிறோம்.

கிரிக்கெட் உட்பட விளையாட்டுக்களில் இருந்து மாஃபியாக்களை அப்புறப்படுத்த அமைச்சர் தற்போது சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார். எப்படி இருந்தாலும் தென் ஆபிரிக்காவுடன் நடந்த போட்டியில் பெற்ற வெற்றி சிறந்தது.

இதற்கு முன்னர் ஆசிய நாடுகள் தென் ஆபிரிக்காவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை. அணிக்கும் அணியின் தலைவரும் பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறோம்.

நான் பிரதமர் பதவியில் இருக்கும் போது கிரக்கெட் விளையாட்டு வீழ்ச்சியடைந்தது எனக்கு கவலையாக இருந்தது. எனினும் தற்போது சற்று மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இனி எப்படியாவது கிரிக்கெட் விளையாட்டை முன்னேற்றி நாம் முன்னோக்கி செல்லாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.