Header Ads



கிளைமோர், புலிக்கொடி, புலி சீருடையுடன் கைதானவர் வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம்


(எம்.எப்.எம்.பஸீர்)

முல்லைத்தீவு, ஒட்டு சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றில் கிளைமோர் குண்டு, புலிக்கொடி, புலி சீருடை போன்றவை மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக் கணக்கில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை நீண்ட விசாரணைகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து இந்த பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வெடிபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான இவர்கள்  தற்போது அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

1 comment:

  1. மீண்டும் பயங்கரவாதத்தை பரப்பி நாட்டை சுடுகாடாக்க இவ்வளவு பணம் வழஙகபட்டிருக்கலாம். வன்னியில் நடக்கும் பயங்கரவாதங்களுக்கு பின்னால் சார்ள்ஸ் நிர்மலநாதன் இருப்பான். அவனை கைது செய்து விசாரித்தால் அனைத்தும் வெளிவரும்

    ReplyDelete

Powered by Blogger.