தோல்வியடையும் வேட்பாளரை எமது அணி, ஜனாதிபதித் வேட்பாளராக நிறுத்தாது
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என கூற அவர்களுக்கு உரிமை இருப்பது போல், கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என கூற கூட்டு எதிர்க்கட்சியினரான தமக்கு உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
யாரை வேட்பாளராக நிறுத்துமாறு யோசனை முன்வைக்கப்பட்டாலும் தோல்வியடையும் வேட்பாளரை தமது அணி, ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தாது எனவும் அவர் கூறியுள்ளார்.
முழு நாட்டையும் வெற்றி கொள்ளும் வேட்பாளர் யார் என்பது முழு நாட்டுக்கும் நன்றாக தெரியும். அந்த வேட்பாளரை நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறுவோம்.
இதனை விடுத்து, தோல்வியடையும் வேட்பாளரை நிறுத்தி, நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை விட்டு கொடுக்க எவரும் தயாரில்லை எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment