முதன்முறையாக ஆசியக் கோப்பையை, அள்ளிச்சென்றது கட்டார்
இன்று -01- அபுதாபியில் நடைபெற்ற 17வது ஆசியக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஜப்பானும்,
முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கத்தாரும் மோதியதில், ஜப்பானை அதிரடியாக வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் ஆனது கத்தார்.
ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில்(UAE ) 17வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் நடைப்பெற்று முடிந்தது.
ஆசியா, ஓசியான் பகுதிகளில் உள்ள 32 நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. ஜன.5ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி தொடர் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியது.
அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இறுதிப் போட்டியில் ஜப்பான்-கத்தார் அணிகள் மோதின.
ஜப்பான் அணி 5 முறையாகவும், கத்தார் முதல்முறையாகவும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்று இருந்த நிலையில் கத்தார் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை ஆரம்பம் முதலே காட்டினர்.
அலி 12 ஆம் நிமிடம் முதல் கோலையும், ஹதீம் 27 ஆம் நிமிடம் 2 ஆம் கோலையும் போட்டு 5 முறை சாம்பியன் ஆன ஜப்பானுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
அதனை அடுத்து ஜப்பான் வீரர் டகுமி 69 ஆம் நிமிடம் ஒரு கோலை தன் அணிக்காக போட அதனை அடுத்து கத்தார் வீரர் அபீப் 83 ஆம் நிமிடம் மற்றொரு கோலை ( penalty) போட்டு ஜப்பானுக்கு அதிர்ச்சி கொடுத்தார்
கத்தார் 3 :1 என்ற கோல் அடிப்படையில் வென்றது.
2022ல் நடைபெறும் உலக கோப்பை போட்டியை நடத்தும் கத்தார்.
இப்போட்டியில் தொடர் பயிற்சிகளின் மூலம் கத்தார் முதல் முறையாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்று சாம்பியன் ஆன அதேவேளை உலக கோப்பையையும் ஒரு கை பார்க்க உள்ளது.
இத்தொடரின் லீக் போட்டிகளில் சவுதி அரேபியா, லெபனான், வட கொரியா அணிகளையும், ரவுண்டு-16ல் ஈராக்கையும், காலிறுதியில் தென்கொரியா, அரையிறுதியில் யுஏஈ அணிகளையும் கத்தார் வீழ்த்தியது
congradulations Qatar
ReplyDeleteCongrats to Qatar team
ReplyDelete