பயந்து தப்பியோடிய அரவிந்தன் - முஸ்லிம் சமூகத்துக்காக போராடும், சட்டத்தரணி சரூக்கின் பணி அளப்பரியது
இனங்களுக்கிடையில் முறுகலைத் தோற்றுவிக்க முயற்சித்த அரவிந்தனுக்கெதிராக செம்மண்ணோடை சலீம் என்பவரால் கடந்த 15.01.2019 ம் திகதி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு மீதான விசாரண இன்று 22/02/2019ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்தது.
இந்த நிலையில் வாழைச்சேனைப் பொலிஸாரினால் அழைக்கப்பட்டிருந்த அரவிந்தன், இன்று பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி இருந்த வேளை, முறைப்பாட்டாளரான செம்மண்ணோடை சலீமின் சட்டத்தரணி முஹம்மது ஷறூக் அவர்களைக்கண்டு பயந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைக்காக வந்து தப்பியோடிய அரவிந்தனை விசாரணையில் கலந்து கொள்ளுமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் விசாரணைக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொலைபேசியூடாக அழைத்த போதிலும், பதிலளிக்காமல் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரவிந்தன் இன்றியே வழக்கை கொண்டு நடாத்துவதற்குத் தேவையான சகல அறிவுறுத்தல்களுடனும் அரவிந்தனின் இனவாத பேச்சடங்கிய தொலைபேசியும் ஆதார வீடியோக்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்துக்கெதிராக இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் இனவாதக்கருத்துக்களுக்கு எதிராக சட்ட ரீதியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் சட்டத்தரணி ஷறூக் அவர்கள் இன்றைய தினமும் தனது உதவியாளருடன் அரவிந்தனுக்கெதிரான விசாரணைக்காக பல மைல் தூரம் பிரயாணம் செய்து வாழைச்சேனை பொலிஸ் நிலையம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இனவாதிகளால் அச்சுறுத்தப்படும் முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்து வரும் ஷறூக் அவர்களின் சமூகத்துக்கான பணி தொடர வாழ்த்துக்கள்.
அத்தோடு, இனவாதக் கருத்துக்களை பரப்பி இனமுறுகலைத் தோற்றுவிக்கும் விதத்தில் வீடியோ பதிவை வெளியிட்ட அரவிந்தனுக்கெதிராக எதிர்வரும் வாரத்தில் நீதிமன்ற அனுமதியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென வாழைச்சேனை பொலிசார் உறுதியளித்துள்ளனர்.
அதே நேரம், அரவிந்தனுக்கெதிரான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை சட்ட ரீதியான முன்னெடுப்புக்கள் தொடருமென சட்டத்தரணி ஷறூக் தெரிவித்துள்ளார்.
பொன்னையன்.இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் இப்படியான பொறம்போக்கிகளைச்சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
ReplyDelete