சவராணை முஸ்லிம் வித்தியாலயத்தின், புதிய கட்டடத் திறப்பு விழா
எமது கிராமத்தின் வளர்ச்சியில் வரலாற்றுச் சாதனை படைக்கும் மாபெறும் நிகழ்வாகிய பாடசாலையின் புதிய இரண்டு மாடிக்கட்டிட திறப்பு விழா வைபவம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணியளவில் சவரானை முஸ்லிம் வித்தியாலயத்தில் எமது அதிபர் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற இருக்கின்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக குவைத் நாட்டு தனவந்தவர் யாகுப் யூசுபின் அன்பளிப்புடன் கெளரவ அதிதிகளாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் றிஸாத் பதியுத்தீன், மற்றும் ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சான்த அபேசேகர கலந்து கொள்ள இருக்கின்றனர். இக்கட்டிடத்திற்கு பூரண ஒத்துழைப்பு மற்றும் அனுசரனை வழங்கிய அல் ஹிமா அமைப்பின் தலைவர் நூருல்லாஹ் ( நளீமி) அவர்களும் விசேட அதிதியாக கலந்துகொள்ள உள்ளார். குறிப்பாக பாடசாலையினால் சிறப்பு மலர் வெளியீடும் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த கட்டிடத்திற்கு பல்வேறு வகையில் உதவிய நல்லுள்ளம் படைத்தவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம் பெற இருக்கின்றமையால் அனைத்து வாழிபர்கள், பழைய மாணவர்கள், புத்திஜீவிகள், பெரியவர்கள், பெற்றோர்கள், உலமாக்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் வருக வருக என்று அழைக்கிறோம்.
ஏற்பாட்டுக்குழு.
Alhamdhulillah !
ReplyDelete