குவைத்திலிருந்து பயணித்த இலங்கையர், மாரடைப்பால் மரணம்
குவைத்திலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் பயணித்த இலங்கையர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார்.
சிறிலங்கன் ஏயார்லைன் நிறுவனத்துக்குச் சொந்தமான யூ.எல்.230 எனும் விமானத்தில் பயணித்த 59 வயதுடைய ஒருவரே வரும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மேற்படி விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
மாரடைப்புக் காரணமாகவே மேற்படி பிரஜை உயிரிழந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Post a Comment