சுதந்திர தினமா..? தேசிய தினமா..??
நாட்டில் சுதந்திரம் இன்மையால், சுதந்திர தினம் தேசிய தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்வளவு நாளும் சுதந்திர தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த தினம் இம்முறை சுதந்திர தினமா, தேசிய தினமா என தெரியாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை அதிகரித்துக்கொள்வதற்காக, தேசிய அசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று மக்களை ஏமாற்றாமல், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதற்காக, அரசமைப்பை திருத்த வேண்டுமென்றால் அது சிறந்தது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2009 war ended day is the real freedom day for the citizens of Srilankans
ReplyDelete