ஆணும் பெண்ணும் சமம் என்பது, இயற்கை உடற்கூறுக்கு முரணானது - எர்தோகான்
முஸ்தஃபா கெமால் பாட்சாவால் சீரழிக்கப்பட்ட இஸ்லாம் மீண்டும் துருக்கியில் துளிர் விட்டு நெடுமரமாக வளர்ந்திருக்கிறது
நெக்மதீன் எர்பகான் என்ற முதிய வயது உடைய இஸ்லாமிய சார்பு ஆட்சியாளரின் வெல்பேர் பார்டி முதலில் வெற்றி பெற்ற போது சீரணிக்க முடியாத மதச்சார்பற்ற இராணுவம், அதை கொஞ்ச காலத்திற்குப் பின் நீக்கியது அக்கட்சியைத் தடை செய்தது. அது பிறகு ஜஸ்டிஸ் மற்றும் வெல்பேர் பார்ட்டி என்று பெயர் மாற்றம் செய்து மீண்டும் அரசியலில் ஈடுபட்டது
பிறகு இஸ்தான்புல்லின் மேயராக இருந்து சீரிய பணியாற்றி புகழ் பெற்ற ரகீப் தையிப் எர்தோகான், கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய கட்சியை வலிவு அடையச் செய்து இராணுத்தின் வலிமையை நீர்த்து போகச் செய்தார்
11 ஆண்டு காலம் பிரதமாக பணியாற்றி துருக்கியை பொருளாதார வல்லரசாக்கினார் யானை பலத்தோடு அதிபராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
சமீபத்தில் இஸ்தான்புல்லில் நடந்த பெண்கள் மற்றும் நீதி மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது;
பெண்களின் நோக்கே தாய்மை தான். இது தான் இஸ்லாம் சொல்லித் தரும் வாழ்க்கை.
நம்முடைய மதம் இஸ்லாம் சமூகத்தில் பெண்ணுக்கு ஒரு பங்கை வரையறை செய்திருக்கிறது. அது தாய்மை.
இதை பெண்ணுரிமை பேசுபவர்களிடம் சொன்னால் ஏற்க மாட்டார்கள் ஏன் என்றால் அவர்கள் தாய்மை என்ற சித்தாந்தத்தை ஏற்பதில்லை
வேலை வாய்ப்பில் ஆணும் பெண்ணும் சமம் என்பது. இயற்கைக்கு உடற்கூறுக்கு முரணானது
என் தாயின் பாதங்களை நான் முத்தமிடுவேன் அவை சொர்கத்தின் மணம் என்பதால் என் தாய் நெகிழ்ச்சியால் கண்ணீர் சொறிவார் தாய்மை என்பது விவரிக்க இயலா ஒன்று என்று நெகிழ்ச்சியுடன் உரையாற்றி உள்ளார்.
Allahu akbar kabira wAlhamdulillahi kathira wa subhanallahi bukratan wa asila! Laa'ilaha illallahu Allahu Akbar. Allahu Akbar Walillahil hamdhu.
ReplyDeleteHe is a great and powerful Muslim world leader not only Turkey. He is going to move Uthumanian Kilafath
ReplyDelete