கூட்டுறவு இளைஞர் வலுவூட்டல், தொழில்துறை சுயதொழில் உபகரணங்கள் கையளித்தல் வைபவம்
வர்த்தக வாணிபத்துறை அமைச்சினால் நடத்தப்பட்ட கூட்டுறவு இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில்துறை வழிகாட்டல், சுயதொழில் உபகரணங்கள் கையளித்தல் வைபவம் ஒன்று கண்டி, பொல்கொல்லை மகிந்த ராஜபக்ச மகாநாட்டு மண்டபத்தில (24.2.2019) இடம் பெற்றது.
வர்தக வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களது வழிகாட்டலில் இது இலவசமாக வழங்கப்பட்டது. இதில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் தொகை இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர். 20 இலட்ச ரூபா பெறுமதியான தையல் யந்திரம், வேல்டிங் யந்திரம், மாவு மற்றும் தானியங்கள் அரைக்கும் யந்திரம் போன்ற பல்வேறு உபகரணங்களும் இலவசமாக பயனாளி இளைஞர்யுவதிகளுக்கு வழங்கப்பட்டன.
வர்த்தக வாணிபத் துறை அமைச்சின் மேலதிகச் செயலாளரும் பதில் கூட்டுறவு ஆணையாளருமான எஸ்.எல். நசீர், இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத் தலைவர் ரியாஸ் மொகமட், அமைச்சின் இணைப்பு அதிகாரி இர்சாத் ரஹ்மத்துல்லா, ஆகியோர் அதிதிகளாகக் கலந்து அவற்றைக் கையளித்தனர். அதன் போது எடுக்கப்பட்ட படம்.
- JM.Hafeez-
Post a Comment