ஜோர்தானில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும், இலங்கையர்களின் கவனத்திற்கு...!
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக ஜோர்தானில் தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற கடந்த 5 ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வரையான 6 மாத கால பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்பு காலத்தை ஜோர்தான் அரசாங்கம் அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஜோர்தானில் 3 ஆயிரத்து 500 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இது குறித்து ஜோர்தான் அரசு அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.
ஜோர்தானில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் இந்த பொது மன்னிப்புக் காலத்தில் நாடு திரும்பவும் அல்லது புதிய முதலாளி ஒருவரின் கீழ் தொழில் புரியவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment