ஹக்கீமின் 'பிரஜா ஜல அபிமானம்' - நீண்ட அரசியல் பயணத்தில், குறுகியகால வெற்றி என்கிறார்
தனது நீண்ட கால அரசியல் பயணத்தில், மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் அடையவிருக்கும் பாரிய வெற்றி இலக்காக ஆயிரம் கிராமங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் சுத்தமான குடிநீர் வழங்கல் செயற்றிட்டத்தை குறிப்பிடலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீமின் எண்ணக்கருவில் உதித்த 'பிரஜா ஜல அபிமானம்' என்ற செயற்றிட்டம் பற்றி விளக்கமளிக்கும்; போதே அவர் இதனை கூறினார்.
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினூடாக வழங்கப்படும் குழாய் நீரைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இன்னும் பத்தாண்டுகளுக்கு பெற முடியாத நிலையிலுள்ள பின்தங்கிய ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் மக்களை மையப்படுத்தி தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் மேற்படி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தலவத்துகொடையில் அமைந்துள்ள தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பிரஸ்தாப திணைக்களத்திற்கு உலக வங்கியின் நிதியுதவியில், நடமாடும் குடிநீர் பரிசோதனைக் கூடத்தை கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,
தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இன்றைய நிலையில் இருப்பது போன்று இருக்கவில்லை. நான் கடமையைப் பொறுப்பேற்ற மூன்று வருடங்களில் எமது அமைச்சின் கீழ்வரும் இந்த திணைக்களம் எவரும் கவனிப்பார் அற்ற, கைவிடப்பட்ட நிலையில் அநாதையாக இருந்தது.
குறிப்பாக, திணைக்களங்களின் அபிவிருத்தியில் நாட்டம் செலுத்த வேண்டுமென்ற நோக்கம் அரசாங்க திறைசேரியிடம் பாரியளவில் இருப்பதில்லை. ஏனெனில், திணைக்களத்தில் பணி புரிபவர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்க வேண்டியுள்ளமையினால் அதன் வளர்ச்சியிலும், போக்கிலும் எவ்விதமான அதீத தலையீடுகளை செலுத்த திறைசேரி முன்வருவதில்லை. இருப்பினும், சர்வதேச மற்றும் தனியார் அமைப்புக்கள் இவ்வாறு வழங்கும் உதவிகளினூடாக நாட்டு மக்களுக்கு நன்மை இருந்;தால், அவற்றிற்கு திறைசேரி இணக்கம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு அமைச்சின் கீழ்வருகின்ற திணைக்களத்திற்கான தேவைகளை இதுவரை உரிய முறையி;ல் நிறைவேற்றப்;படவில்லை. இந்த திணைக்களத்திற்கான ஆளணி மற்றும் பௌதீக வளத் தேவைகள் கூட போதியளவில் வழங்கப்படவில்லை. இதுவே உண்மை நிலையாகும்.
திறைசேரியின் முகாமைத்துவ சேவைப் பிரிவின் கவனத்திற்கு இவை கொண்டுவரப்பட்டு நிவர்த்திக்கப்பட வேண்டும்.
ஆயிரம் கிராமங்களை மையப்படுத்தி நாங்கள் முன்னெடுக்கவுள்ள நீர் வழங்கல் செயற்றிட்டம் இலேசான காரியமல்ல. இது மிகவும் பாரதூரமான ஒரு செயற்றிட்டம் என்பதை தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நன்றாக மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். இந்த செயற்றிட்டம் எவ்வளவு துரிதமாக முன்னெடுக்கப்பட போகின்றது என்பதை அறிந்து கொள்வதில்; நிதியமைச்சர் அதிக ஆர்வம் செலுத்தி பாராளுமன்றத்தில் வைத்து என்னிடம் கேட்டார். அதனை ஆரம்பித்து எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்வதாக அவரிடத்தில் கூறினேன்.
சில தினங்களுக்கு முன்னர் பதுளை மாவட்டத்தில் உலக வங்கியின் ஒத்துழைப்புடன் பல இடங்களில் நாங்கள் நீர் வழங்கல் செயற்றிட்டங்களை நிறைவு செய்து அவற்றை மக்கள்; மயப்படுத்தினோம். கிராமப்புற மற்றும் தோட்டப் புற மக்களின் காலடிக்கு சுத்தமான குழாய்; நீரை கொண்டு சேர்க்கும் எங்களது முயற்சி இவ்வாறான செயற்றிட்டத்தினூடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவது உண்மையில் மகிழ்ச்சிக்குரியது.
எனது நீண்ட கால அரசியல் பயணத்தில், மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் அடையவிருக்கும் வெற்றி இலக்காக இவ்வாறான செயற்றிட்ட முன்னெடுப்பைக்களைக் காண்கின்றேன். இதற்கான ஊடக பங்களிப்பை சிறந்த முறையில் மேற்கொண்டு இத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமன்றி, இவ்வாறான நீர் விநியோக வசதிகளை செய்து கொடுப்பதில் தனியார் துறையினருக்கும் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்துவது அவசியமாகும்.
சில தனியார் நிறுவனங்கள்; சிறியளவிலான இவ்வாறான கிராமிய நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்து வைத்து அவற்றிற்கு ஊடகங்கள் சிலவற்றினூடாக அபரிமிதமான பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால், பொதுவாக எமது அமைச்சினூடாக குறிப்பாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் தேசிய சமூக நீர் வழங்;கல்; திணைக்களம் என்பவற்;றினூடாக மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான செயற்றிட்டங்களுக்கு போதிய பிரசாரம் ஊடகங்களினூடாக வழங்கப்படுவது மிக அரிதாகவே இருக்கின்றது.
மிகவும் பின்தங்கிய கிராமங்களை இலக்காக கொண்டு அவற்றில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் அப்பாவி பொதுமக்களுக்கு எங்களது சிறியளவிலான நீர் வழங்கல் திட்டங்களினூடாக சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதனால் ஆரோக்கியமான சமூகமொன்றையும் உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
சமூகத்தை மையப்படுத்திய அமைப்புகளினூடாக தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் மூலம் நாட்டின் மொத்த குழாய் நீர் தேவையில் நான்;கில் ஒரு பங்;கை நிறைவு செய்;யக் கூடியதாக இருக்கும் என்றார்.
Post a Comment