புதிய கட்சியை ஆரம்பிக்கமாட்டேன், நான் சு.க.யிலே இருக்கிறேன் - சந்திரிக்கா
புதிய அரசியல் கட்சி ஒன்றை தாம் ஒருபோதும் ஆரம்பிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலரும் இணைந்து புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இது தொடர்பாக கம்பஹா பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, “அழிந்து போயுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாங்கள் கட்டியெழுப்புவோம்.
அதனை விடுத்து புதிய கட்சியை ஆரம்பிக்க போவதில்லை. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருக்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.
Post a Comment