பசில் - கம்மன்பில மோதல், தலையிட்டு சமாதானப்படுத்திய மகிந்த
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் நாடாளுமன்ற உறுப்பனர் உதய கம்மன்பிலவுக்கும் இடையில் காரசாரமாக வாக்குவாதம் நடந்துள்ளதாக தெரியவருகிறது.
கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், அந்த கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவுக்கும், உதய கம்மன்பிலவுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
உள்ளூராட்சி சபைகளில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக உரிய நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என உதய கம்மன்பில் முன்வைத்த யோசனை காரணமாக இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
“நீங்கள் கூறுவது போல் செய்ய முடியாது. பொதுஜ பெரமுனவின் உரிமை எமக்கே உள்ளது” என பசில் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள உதய கம்மன்பில “உங்களுக்கு தேவையான வகையில் ஆட நாங்கள் தயாரில்லை. மகிந்த ராஜபக்ச காரணமாகவே நாங்கள் இங்கு இருக்கின்றோம். மகிந்த இல்லாவிட்டால் மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட மாட்டோம்” என கூறியுள்ளார்.
“தனித்து போட்டியிட்டால் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்” எனக் கூறியவாறு மகிந்த ராஜபக்ச இந்த பிரச்சினையில் தலையிட்டுள்ளார்.
“நீங்கள் நினைவில் வைத்து கொள்ளுங்கள் மைத்திரி குணரத்னவின் வாழை சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட 21 பேர் தெரிவாகியுள்ளனர். சிறிநாத் பெரேராவின் மின்விளக்கு சின்னத்தில் போட்டியிட்டு 10 பேர் தெரிவாகியுள்ளனர்.
இவர்களை விட நாங்கள் பலவீனமானவர் என நினைக்கின்றீர்களா?” என உதய கம்மன்பில, மகிந்த ராஜபக்சவுக்கும் பதிலளித்துள்ளார்.
இதற்கு பின்னரும் உதய கம்மன்பில மற்றும் பசில் ராஜபக்ச இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் மகிந்த ராஜபக்ச தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment