பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் - இந்தியா
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தானுடன் விளையாட்டு உறவை துண்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்துள்ளனர்.
இங்கிலாந்தில் நடக்க உள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கும் லீக்கில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது என முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் வலியுறுத்தியுள்ளனர். உலக கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம் ஏதும் செய்யமாட்டோம் என்று ஐ.சி.சி. ஏற்கனவே கூறி விட்டது.
இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்று ஐசிசிக்கு கடிதம் எழுதுமாறு பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியை, நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் உடன் எந்தஒரு போட்டியையும் விளையாடும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
ஐசிசி கூட்டம் வருகிற 27-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை துபாயில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை மோதல் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்களுக்கு விருப்பம் இல்லையெண்டா நீங்க தானே விலகிப்போகணும் இந்திய சொறி நாய்களா? மீண்டும் மீண்டும் உலகின் கேவலமான நாடு என்பதை நிரூபிக்கின்றீர்கள்
ReplyDeleteஇந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் ஊடாக பாயும் இந்தஸ் நதியில் அணையை கட்டி, திசை திருப்பிவிட்டால், பாக்கிஸ்தான் அடுத்த சோமாலியா ஆக மாறிவிடும்.
ReplyDeleteபாகிஸ்தானுடன் விளையாடா இந்திய அரவாணி அணியினருக்கு தொடை நடுக்கம் என்றால் தாராளமாக வெளியேறலாம் யாரும் இந்திய அரவாணிகள் போல ஒப்பாரி வைக்கமாட்டார்கள்
ReplyDelete