போதைவஸ்துக்கு எதிராக பொலிஸார், நடத்தும் போருக்கு இதுதான் காரணம்
போதைவஸ்துக்கு எதிராக பொலிஸார் நடத்தும் போருக்கு காரணம் 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தமாகும் என்று பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.
புளத்சிங்களயில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இன்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
19ஆவது திருத்தம் காரணமாக பொலிஸ் இந்த விடயத்தில் சுதந்திரமாக செயற்பட்டு அரசியல் தலையீடின்றி போதைப்பொருட்களை மீட்க முடிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
19வது திருத்தம் தொடர்பில் தற்போது விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. எனினும் அதுவே இன்று போதைப்பொருட்களை மீட்பதற்கு உதவியிருக்கிறது என்றும் ரணில் குறிப்பிட்டார்.
இலங்கையில் அதிகமான ஹெரோய்ன் போதைப்பொருள் என்று கருதப்படும் 294.49 கிலோகிராம் ஹெரோய்ன் நேற்று கொள்ளுப்பிட்டியவில் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலேயே ரணில் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
Post a Comment