Header Ads



இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள், பல்குழல் ரொக்கட்டுகள் சுதந்திரதின பேரணியில்


இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட போர் உபகரணங்கள் சிலவற்றை 71வது தேசிய சுதந்திர தின பேரணியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய இந்த ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஏவுகணைகள், பல்குழல் ரொக்கட்டுகள் என்பன தயாரிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் சந்தன பெரேரா, பிரிகேடியர் திரான் டி சில்வா ஆகிய அதிகாரிகள் தலைமையிலான தொழில்நுட்பவியலாளர்கள் இந்த ஆயுதங்களை தயாரித்துள்ளனர்.

நவீன ஆயுதங்களை தயாரித்தவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எனது அரசாங்க காலப்பகுதியில் கோத்தபாயவின் பணிப்புரையின் கீழ் தயாரிக்கப்பட்டன. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான ஆயுதங்கள் இவையாகும் என மஹிந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறும் சுதந்திர தின பேரணியின் போது இந்த ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

ஒரு நாடு தன்னிடமுள்ள ஆயுத, படை பலங்களை பிராந்திய நாடுகளுக்கு வெளிப்படுத்தும் நோக்கில், சுதந்திர தினத்தின் போது இராணுவ வளங்கள் காட்சிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது

2 comments:

  1. கொஞ்சம் தள்ளி நில்லுங்க மக்களே........ இலங்கை பொருட்களின் தரம் அப்புடி......

    ReplyDelete
  2. Good effort...if used to promote peace

    ReplyDelete

Powered by Blogger.