இரகசியத் தகவலால், கடுப்படைந்த மைத்திரி
மாகாண சபை தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென அமைச்சரவை பத்திரம் ஒன்றை ஜனாதிபதி மைத்ரி முன்வைத்துள்ளார் அல்லவா.
அதற்கிடையில் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஆராய சர்வகட்சி கூட்டமொன்றை அடுத்த வாரம் கூட்ட ஏற்பாடு செய்துள்ளார் பிரதமர் ரணில்...
“இந்தக் கூட்டம் வெறும் கண்துடைப்பு கூட்டம்... மாகாண சபை தேர்தல் வேண்டாம் முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வோம் என்று சில கட்சித் தலைவர்களை அந்த கூட்டத்தில் சொல்லவைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. மாகாண சபைத் தேர்தல் வந்தால் வெற்றி நிச்சயமில்லை எனக்கருதும் ரணில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றையே விரும்புகிறார்.மாகாண சபை தேர்தல் முதலில் வேண்டுமென ஜனாதிபதி விரும்பினாலும் அது இழுத்தடிக்கப்படும்...”
என்று அரச தேசிய புலனாய்வுச் சேவை இரகசிய அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் கொடுத்திருக்கிறது..
இதனால் மிகவும் கடுப்பில் இருக்கிறார் ப்ரெசிடெண்ட்...
இந்நிலையில் தேசிய அரசை அமைக்க யு என் பி யோசனை முன்வைத்திருப்பதில் இன்னும் பிரச்சினை...
அரசியல் அதிரடிகள் மீண்டும் நடக்கலாம்...!
-Sivaraja-
Post a Comment