சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் மீள்வருகை, சமுதாயத்தின் சட்டப் போராட்ட இடைவெளியை நிரப்பும்
இனவாதம் உச்சத்தை தொட்டிருந்த கடந்த காலத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்கள், பள்ளிகள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் உரிமைப் பறிப்பு மற்றும் கலாசாத்தின் மீதான திட்டமிட்ட உரிமை பறிப்புகள் என இனவாதத்தின் கோர முகம் தலை விரித்தாடியது.
மாற்று சமுதாயத்தினரின் பிரச்சினைகளின் போது அவர்களுக்காக குரல் கொடுப்பதற்கும், சட்ட ரீதியாக பிரச்சினைகளை எதிர்கொண்டு சமுதாயத்தை பாதுகாப்பதற்கும் பல சட்டத்தரணிகள் களத்திலிருக்கும் நிலையில் முஸ்லிம் சமுதாயத்தின், சமுதாய பிரச்சினைகளின் போது சமூக நலன் கருதி சட்ட ரீதியாக நீதி மன்றில் போராடும் சட்டப் போராளிகளின் கையறு நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
இந்நிலைமையில் தான் கடந்த கால இனவாத செயல்பாடுகளின் போது இனவாதிகளுக்கு எதிராக இறைவனின் உதவியினால் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு கடும் சட்டப் போராட்டத்தை நடத்தியது.
இந்தப் போராட்டத்தினால் இனவாதிகளின் கடும் எதிர்ப்பினை பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவே சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழு சந்திக்கவும் ஏற்பட்டது.
குறிப்பாக அளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்களை இனவாதிகள் மீது ஆதாரத்துடன் பதிவு செய்தார்கள்.
முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளின் போது பல சட்டத்தரணிகள் அது பற்றி வாய் திறக்க பயந்த நிலையில் அல்லாஹ்வின் உதவியினால் இவர்கள் அவற்றை எதிர்கொண்டார்கள்.
பல பள்ளிவாயல் பிரச்சினைகளின் போதும் நீதி மன்றம் சென்று போராடினார்கள்.
முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சந்தர்பங்களில் மக்களை நேரடியாக சந்தித்து சட்ட உதவிகளை செய்தார்கள்.
இலங்கையில் தஞ்சமடைந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இனவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில் இனவாதிகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தினார்கள். இப்படி பல சந்தர்பங்களை நினைவு கூறலாம்.
பொது பல சேனாவினால் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் மீது மத நிந்தனை வழக்கு தாக்கள் செய்யப்பட்ட நேரத்தில் குறித்த வழக்கை எடுத்து நடத்துவதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகள் பலரும் அச்சம் வெளியிட்ட நேரத்தில் சகோ. ஷிராஸ் நூர்த்தீன் குறித்த வழக்கை கையில் எடுத்தார். வழக்கின் முதல் நாள் அமர்வில் சகோ. சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் அவர்கள் மன்றில் ஆஜராகியதை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூற வேண்டிக் கடமைப்படுகிறேன்.
GSP+ வரிச் சலுகையை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்காக வேண்டி, முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்க முயன்ற ஆளும் ஐ.தே.க அரசாங்கத்திற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தவிருந்த நேரத்தில், அல்லாஹ்வையும், இஸ்லாத்தையும் அசிங்கப்படுத்தும் நோக்கில் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் பேசியிருந்தார்.
அல்லாஹ்வை அவமானப்படுத்தும் வகையில் பேசிய ஞானசாரருக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பில் யாரும் பதிலளிக்க முன்வராமல் மவ்னித்துப் போயிருந்தார்கள்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு தன்னிச்சையாக திருத்தம் கொண்டுவர முனைவதற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் ஞானசார தேரரின் இஸ்லாம் விரோத இனவாத, அபத்தமான கருத்துக்கு எதிராக சகோ. அப்துர் ராசிக் பகிரங்கமாக பதிலளித்து உரையாற்றினார்.
ஞானசாரருக்கு எதிராக பேசியதற்காக சகோ. அப்துர் ராசிக் கைது செய்யப்பட்டு 24 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார்.
இந்த சந்தர்ப்பத்திலும் சமுதாயம் சார்பில் வழக்காடுவற்கோ, நீதிமன்றப் படியேறுவதற்கோ சட்டத்தரணிகளின் பலர் பின்வாங்கிய நேரத்தில் தைரியமாக நீதி மன்றம் வந்தார் சகோ. ஷிராஸ் நூர்தீன் அவர்கள்.
இந்த நேரத்தில் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அவர்களும் பிரதானமாக நினைவு கூறத் தக்கவர். மாற்று சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பினும், இனவாதத்திற்கு எதிராக பல வழக்குகளில் ஷிராஸ் நூர்த்தீன் அவர்களுடன் ஆஜரானார்.
அப்துர் ராசிக் அவர்களுக்கு எதிரான பொது பல சேனாவின் மத நிந்தனை வழக்கு மற்றும் ஞானசாரவுக்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்ட வழக்கு என பல வழக்குகளில் ஷிராஸ் நூர்தீன் அவர்களுடன் இணைந்து வழக்காடினார்.
சமூக நலனுக்காக இனவாத பிரச்சினைகளின் போது தானாக முன்வந்து சட்ட உதவிகளை சமுதாயத்திற்காக செய்து வந்த சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களை இதிலிருந்து ஓரம் கட்டுவதே இனவாதத்தை வைத்து அரசியல் இலாபம் அடையும் சிலருக்கு தேவையானதாக இருந்தது.
பொது பல சேனாவின் தேவைக்காக முஸ்லிம்களை காட்டிக் கொடுத்து, பின் வாசல் வழியாக இனவாதிகளுடன் கைகோர்த்து முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்து, பதவிகளுக்காக பல்லிழித்துக் கொண்டு திரியும் சில அரசியல் வாதிகளும், போலி ஆன்மீக வாதிகளும், பணத்திற்காக எதனையும் செய்யும் சில லெட்டர் பேட் இயக்க வாதிகளும் இணைந்து செய்த சில காரியங்களினால் சில காலம் சமுதாய சட்டப் போராட்டத்தை விட்டும் ஒதுங்கியிருந்தார் சகோதரர் ஷிராஸ் நூர்தீன் அவர்கள்.
அல்ஹம்து லில்லாஹ். மீண்டும் சட்டப் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளார் சகோதரர் ஷிராஸ் அவர்கள்.
தூபி மீதேறி புகைப்படம் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள 07 மாணவர்கள் பற்றிய வழக்கு விசாரனையில் சட்டத்தரணி ஷிராஸ் களமிறங்கவுள்ளதான செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்தும் முஸ்லிம் சமுதாய பிரச்சினைகள் விவகாரங்களில் சட்டப் போராட்டத்தின் மூலம் நீதி வெற்றிபெற ஷிராஸ் நூர்தீன் அவர்கள் போராட வேண்டும்.
உச்சகட்ட இனவாத சூழலில், இனவாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியாக களமிறங்க பலரும் அஞ்சிய நேரத்தில் களமிறங்கி சமுதாயத்திற்காக போராடிய சட்டத்தரணிகளான ஷிராஸ் நூர்தீன், ருஷ்தி ஹபீப், ஷாஹினாஸ், ஸரூக், நுஸ்ரா ஸரூக் போன்றோருடன் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அவர்களையும் சமுதாயம் மறந்து விடக் கூடாது என்பதுடன் தற்போது குரல்கள் அமைப்பும் சட்ட ரீதியாக முஸ்லிம் சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு களம் கண்டு வருவது பாராட்டத் தக்கதாகும்.
மீண்டும் சமுதாயத்திற்காக சட்டப் போராட்டக் களத்தில் சங்கமிக்கும் சட்டத்தரணி ஷிராஸ் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திப்பதுடன், அவருடைய குழுவினருக்கும், சமுதாயத்திற்காக போராடும் அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.
-ரஸ்மின் MISc
Insha allah
ReplyDeleteசகோதரர் ரஸ்மினின் கருத்துகளை மனதார வரவேற்கின்றேன். உண்மையில் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உற்பட மேலே குறிப்பிட்ட வழக்கறிஞர்களை இந்த சமுதாயம் எந்த வேளையிலும் நன்றியுடன் நினைவுகூற வேண்டும். அவர்களின் பாதுகாப்புக்கும் அவர்கள் சமூகநலன் கருதி பிரதிவாதிகளிடம் எதுவும் எதிர்பார்க்காது வழக்காடும் சந்தர்ப்பங்களில் சமூகத்தின் முக்கிய அங்கத்தவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு துணை செய்ய வேண்டும். ஒரு வழக்கைக் கொண்டு செல்ல ஒரு வழக்கறிஞர் அதிகமான நேரம் வாசிப்பதிலும் ஆய்வு செய்வதிலும் செலவிட வேண்டியிரு்ககின்றது. அந்த சந்தர்ப்பங்களில் அவருக்கு உதவியாக சமூகத்தின் பணக்காரர்களும் ஆர்வலர்களும் அத்தகைய வழக்கறிஞர்களுக்கு உதவ ஒரு அமைப்பை ஏற்படுத்தி அத்தகைய வழக்கறிஞர்களுடன் ஒத்துழைக்கும் ஒரு அமைப்பை அவசரமாக ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் இந்த நாட்டில் முஸ்லிம்களின் எதிர்காலம் நிச்சியம் வௌிச்சமாக இல்லை. பல்வேறு கார்முகில்களும் திரைமறைவில் பல சக்திகளும் முஸ்லிம்கள் தொடர்்நதும் தூங்கும் போது அத்தகைய தீய சக்திகள் விழித்து சூழ்ச்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டி ருக் கின்றன என்பதை நாம் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் வாழ்ந்து கொணடிருக்கின்றோம்.
ReplyDeleteதர்கா நகர் பிரச்சினையின் போது இவராலும் இவரது குழுவினராலும் எமது சமூகத்திற்கு செய்த சட்ட உதவிகளை என்றும் மறக்க முடியாது.
ReplyDeleteஎமது ஊர் என்றும் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது.
May almighty Allah recognise all of them & bestow them more & more prowess and protection to enforce justice.
ReplyDeleteரஸமினால் புகழப்பட்ட முதல் மனிதர்!!!
ReplyDeleteஉண்மையில் இவர் போன்ற சட்டத்தரணிகளுக்கு அல்லாஹ்வின் உதவி நிச்சயம்!!!
PLEASE KINDLY READ THIS, Insha Allah.
ReplyDeleteமுந்திக் கொண்டு செய்திகளைத் தருகின்றோம் செய்திகளை உங்களுக்கு வழங்குவதில் நாங்களே மூத்த முன்னனி என்ற ஒரு வகையான ஹெலுஸினேஷனில் பிரபலமான வெப் போர்ட்டல்களும் இன்னும் சோனக தேசத்தின் தமிழ் வெப் தளங்களும், அதே போல முக நூலில் வாசஸ்தலம் செய்கின்ற பல கொப்பி என்ட் பேஸ்ட் முந்திரிக் கொட்டைகளும் தம்மிஷ்டத்துக்கு அடித்து விடுகின்ற பீலாக்களை பார்க்கின்ற போது பொது சனங்களை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டு அடித்துத் துவைக்கின்றார்கள் இந்த செய்தி கக்குவான்கள்.
இன்றைய டோக் ஒஃப் டவ்னாக மாறியுள்ள ஹொரவப்பொத்தானை, கீரலாகல பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான தூபியொன்றின் மீதேறி பௌத்த்த்தின் புனிதத்தையே பலாகத்காரம் செய்து விட்டார்களென்று தொல் பொருள் கட்டளைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் கெப்பித்திக்கொல்லாவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் எட்டு மாணவர்களும் விடுதலை செய்ய்ப்பட்டார்களென்றும் அதற்காக சட்டத்தரணிகள் யுத்தம் செய்தார்களென்றும் மடவள நிவ்ஸ் உட்ப பல வெப் தளங்கள் பறையடிக்க, மறு புறத்தில் நெட்டிசன்களும் முக நூல் முந்திரிக் கொட்டைகளும் மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களென்றும், ஆயிரம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்களென்றும் தொடர்ந்தேச்சையாக நன் ஸ்டொப்பில் அலப்பறைகள் செய்து கொண்டிருப்பதனை தாங்க முடியாமல்தான் இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன்.
உண்மையில் இன்று நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட எந்த மாணவனும் நீதிமன்றத்தால் விடுதலை (Acquittal) செய்யப்படவே இல்லை என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சட்டத்தரணிகள் சமயோசிதத்தாலும் வாதத்திறமையாலும் மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டர்கள் என்ற இந்த வெப்தளங்களின் தில்லாலடிங்கடி செய்தியே அப்பட்டமான பொய்யும் புழுகுமாகும். சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்…மாணவர்களுக்காக பேசியுள்ளனர். ஆனால் முடிவுகள்தான் நமக்கு எதிராக மாறி விட்டதே. இதில் எனன் பெருமைப்பட வேண்டிக் கிடக்கின்றது.
விடுதலை செய்யப்படாத அந்த அந்த மாணவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்று நீதிமன்றத்தினால் குற்றம் காணப்பட்டு (Conviction) குற்றவாளியாக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்றைய தினம் ஹொரவப்ப்பொத்தானை பொலிசார் குறித்த ஏழு மாணவர்களுக்கும் எதிராக இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளையும் அதே போல வெம்பையர் சட்டமான தொல் பொருட்கள் கட்டளை சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டையும் சேர்த்து மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகள் கொண்ட குற்றப் பத்திரத்தினை தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த குற்றச்சாட்டுப் பத்திரம் வாசித்துக் காட்டப்பட்டதன் பின்னர் ஏழு மணாவர்களும் தாம் அந்த குற்ற்ச்சாட்டுப் பத்திரத்தில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகள் என நீதிமன்றுக்கு சொன்னதன் மூலம் அவர்களை நீதவான் குற்றவாளிகளாகக் கண்டு முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு முறையே ஆயிரம் ரூபா தண்டப் பணம் (Fine) அறவிட்டு அந்தத் தண்டப் பணத்தினை அரச செலவாக (State Cost} அறிவித்துள்ளார்.
பிரச்சினை அதுவல்ல. மாற்றமாக 1940ம் ஆண்டின் 09ம் இலக்க தொல் பொருட்கள் கட்டளைச்சட்டத்தின் (1998ம் ஆண்டின் 24ம் இலக்க சட்டத்தாலும், 2005ம் ஆண்டின் 12ம் இலக்க சட்டத்தாலும் திருத்தப்பட்டது) பிரிவு-31(B) யின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தினைப் புரிந்துள்ளதாக அவர்களுக்கெதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டாகும்.
(Cond. below from above).
"THE MUSLIM VOICE".
(Contd. from above).
ReplyDeleteஅந்தக் குற்றத்தையும் தாங்கள் புரிந்ததாக மாணவர்கள் மன்றுக்கு உரைத்தன் மூலம் அந்தப் பிரிவின் பிரகாரம் ஆகக் குறைந்த தண்டப் பணமான ரூபா. 50,000 னை தண்டப் பணமாக நீதவான் விதித்துள்ளார்.. மூன்றாம் குற்ற்ச்சாட்டுக்கு அரச செலவு என்று வழங்காமல் தண்டப் பணமாகவே கௌரவ மன்று அவர்கள் மீது ரூபா. 50,000 அபராதம் விதித்துள்ளது. இங்கேதான் பிரச்சினையே இருக்கின்றது.
மாணவர்களுக்கெதிராக கொண்டு வரப்பட்ட எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் தாங்கள் குற்றவாளி என்று அவர்கள் குற்றங்களை எற்றுக் கொண்டுள்ளனர். மூன்றாம் குற்றச்சாட்டுக்கு ரூபா. 50,000 விதித்ததன் மூலம் அவர்களது வானாள் பூராவும் அது அவர்களைத் தொடரப் போகின்றத. அதாகப்பட்டது, தண்டப் ணம் என்பது சாதாரணதொரு மேட்டரல்ல. பல வழிகளில் அது பல நேரங்களில் நமக்கு தடைக்கல்லாக அமைந்து விடும். குறிப்பாக படித்தவர்களது வாழ்வில் விஸ்வநாத்தின் செஸ் விளையாடக் கூடிய தில் அதற்து அபாரமாக வந்து விடுகின்றது.
இன்னொரு அப்ரசென்டி மேட்டரையும் இந்த வெப் வீர்ர்களும் முக நால் வல்லுனர்களும் ஆகா ஓகோவென்று போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மாணவர்களுக்கெதிராக கொண்டு வரப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் சட்டமே தண்டப் பணத்தை அறவிடச் சொல்லுகின்றது. தண்டப் பணம் மாத்திரம் அபராதமாக விதிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எந்த நீதிமன்றமும் தண்டப் பணம் விதிக்கப்ப்டுகின்றவர்களது விரல் அடையாளங்களை பெறுமாறு கட்டளையிடுவதில்லை. அதுதான் இன்றைய வழக்கிலும் நடந்தது.
பொதுவாக ஒரு வழக்கில் குற்ற்ச்சாட்டுப் பத்திரம் பொலிசாரால் தாக்க்ல் செய்யப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அந்தக் குற்றச்சாட்டுப் பத்திரத்திலுள்ள குற்ற்சாட்டுகளுக்கு குற்றவாளி என ஒத்துக் கொண்டால் நீதிமனற்மானது தண்டப் பணம் விதிக்கக் கூடிய குற்றமாக இருந்தால் தணடப் பணத்தை விதித்து குற்றவாளியை வெளியே அனுப்பி விடும். அதுதான் இன்று இந்த வழக்கிலும் நடந்திருக்கின்றது.
இப்போது என் கவலையெல்லாம்…….ஆச்சு சும்மா படித்துக் கொண்டிருந்த அந்த ஏழு அப்பாவி மாணவர்களையும் குற்ற்வாளிகளாக மாற்றியாச்சு.….அவர்கள் சட்டத்தினால் அநியாயமாக குற்றவாளிகளாகப்பட்டிருக்கின்றார்கள். இது அவர்களது ஆயுள் வரை ஒரு பேயைப் போல தொடரப் போகின்றது.
அவர்கள் மீதிருக்கின்ற இந்தக் குற்றத்தீர்ப்பு அவர்களது எதிர்கால கெரியரில் கை வைத்து கலங்கடிக்கும். ஏனெனில் அந்த மணவர்கள் இப்போது குற்ற்வாளிகள்.
நமது அரசியல் தலைமைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரோடு எப்ப்டியாவது பேசி இந்த மணாவர்களுக்கெதிராக உள்ள வழக்கை வாபஸ் பெற்று பொது மன்னிப்பு வழங்குதல் என்ற அடிப்படையில் வழக்கை இல்லாமலே செய்திருக்கலாம் அந்தக் கோதாரியைத்தான் எந்த பொலிட்டிக்கல் ராஸ்கலும் கடைசி வரை செய்யவே இல்லையே.
அல்லது நடந்ததாகச் சொல்லப்படுகின்ற குற்றம் நீண்ட காலத்துக்கு முன்னர் இடம் பெற்றது..... எனவே இந்த மணவர்களுக்கெதிராக உள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான சான்றுகள் இல்லை என்ற அடிப்படையில் நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்திருக்கலாம்….அல்லது இந்த மாணவர்களுக்கு எதிராக பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்ற்ச்சாட்டுகளுக்கு தாம் குற்ற்வாளிகள் என்று குற்றச்சாட்டினை ஏற்றுக் கொண்டிருந்த போதும் நீதிமன்றமானது இலங்கை குற்றவியல் நடபடிக் கொவையின் பிரிவு-306ன் கீழ் நிபந்தனையுடன் விடுவிப்பு செய்திருக்கலாம்.
மாணவர்கள் விடயத்தில் அநியாயத்துக்கு இதில் எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் ஆகப் பெரும்துயரம்.
எது எப்படியோ இந்த ஏழு மணவர்களின் விடயத்தில் எதைச் செய்ய் வேண்டுமென்று பேரினவாத சக்திகளும் பொலிசும் திட்டமிட்டிருந்ததோ அதனை வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கின்றார்கள். அவர்களது மிஷன் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
(Contd. below)
"THE MUSLIM VOICE".
(Contd. below).
ReplyDeleteஇந்த அப்பாவி மாணவர்களின் விடயத்தில் நாம் முழுமையாக தோற்று நிற்கின்றோம் என்பதுதான் உச்சக்கட்ட கசப்பான கடைசி உண்மை. மாணவர்கள் ஆயிரம் ரூபா அரச செலவோடு விடுதலை…..கிடுதலை என்று நடந்தது எதுவுமறியாமல் ரத்திஞ்சா போட்டு கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நமது அறியாமைகளின் தெரியாமைகளை நினைந்து கவலை மட்டுமே எஞ்சி நிற்கின்றது.
சூழ்நிலையால் குற்றவாளியாக்கப்பட்டு நிற்கின்ற மாணவர்களே உங்கள் மீதுள்ள அந்த ரூபா. 50,000 தண்டப் பணமென்பதனை உங்களது எதிர்காலம் கருதி நீங்கள் அதனை ஆகக் குறைந்தது அரச செலவாக மாற்ற வேண்டும். உடனடியாக நீங்கள் அந்த ரூபா. 50,000 அபராத்த் தொகையை அரச செலவாக மாற்றிக் கொள்ள அனுராதபுர மேனீதிமன்றத்துக்கு மீளாய்வு விண்ணப்பமொன்றினை செய்யுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் உதவும். அல்லாவிடில் நீங்கள் குற்ற்ம் செய்திருக்கின்றீர்கள் என்ற அந்த குற்றத் திர்ப்பும், தண்டப் பணமும் உங்களை ஒரு டிரகுலா நிழல் போல துரத்திக் கொண்டேயிருக்கும்.
அப்பாவி மாணவர்கள் சட்டத்தின் பெயரால் திட்டமிட்டு குற்றவாளிகளாக்கப்பட்டிருக்கின்றார்கள் நமதுகள் ஒரு பெருநாளைப் போல கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
நாங்கள் எங்கே இருக்கின்றோம்
அது சரி....இவர்கள் அப்பாவிகள்.....எந்தக் குற்றமும் செய்யாதவர்கள்....என்று வாதாடி அந்த அப்பாவிகளை சட்டத்தின் பிடியிலிருந்து மீட்கத்தானே சட்டத்தரணிகள்....இவர்கள் குற்றவாளிகள்தான்.....குற்றம் செய்ததை ஒத்துக் கொள்ளுகின்றார்கள் என்பதற்கு எதற்கு சட்டத்தரணிகள்...இவர்கள் குற்றவாளிகள்தான் என்று சொனனதற்கு ஏன் இத்தனை அலப்பறைகளும் அட்டகாசங்களும்
பாவம் அந்த மாணவர்கள்.
கிண்ணியா சபருள்ளாஹ்
2019-02-05
"THE MUSLIM VOICE".