நீதிபதிகளை வெளுத்துவாங்கிய, முஜிபுர் ரஹ்மான் - சபாநாயகர் பாராட்டு (வீடியோ)
பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் ஆற்றிய உரைக்கு, சபாநாயகர் கரு தமது வாழ்த்துக்களை தெரிவிததுள்ளார்.
கடந்தவாரம் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஐ.தே.க. எம்.பி.க்கள் முறையாக உரையாற்றாது அல்லது பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் உரையாற்றாது நழுவல் போக்கை கடைபிடித்திருந்தனர்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மகிந்தவின் காலத்தில் நீதிபதிகளுக்கு இருந்த பயங்கர நிலைகள் குறித்துப் பேசினார்.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை (25) சபாநாயகர்,, முஜிபுர் ரஹ்மானை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உரைக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமது நேர்மையான செயற்பாட்டினாலே, தற்போதைய அரசாங்கம் தப்பியுள்ளதாகவும் எனினும் அரசியலமைப்பு பேரவை மீதான பாராளுமன்ற விவாதத்தை ஐ.தே.க. தக்கமுறையில் பயன்படுத்தவில்லை எனவும் முஜிபுர் ரஹ்மானிடம், கவலை வெளியிட்டதாகவும் நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து jaffna muslim இணையத்திற்கு அறியவருகிறது.
அன்புக்கும் மதிப்புக்குமுரிய சகோ.முஜீபுர்ரஹ்மான் .பா.உ.அவர்களுக்கு எமது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். சத்தியத்தைச் சத்தியமாகவும், நாட்டுமக்களின் உரிமையைப் பாதுகாக்கவும் குரல் கொடுக்கும் அவரைப் போன்ற பல உறுப்பினர்கள் குறிப்பாக இந்த நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் அவசியமாகும். அல்லாஹ் அன்னாருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்வையும் அவனுடைய பாதுகாப்பையும் அருளுவானாக.
ReplyDelete