என்னால் முடியவில்லை சுதந்திரதின உரையில் ஒப்புக்கொண்ட ஜனாதிபதி, தேசிய அரசையும் நிராகரிப்பு
சுதந்திர தின ஜனாதிபதி உரையின் சாராம்சம்.
* பெப்ரவரி 04 நாம் சுதந்திரமடைந்த நாள். வெளிநாட்டு அழுத்தங்கள் அன்று போல் இன்றும் வேறு வடிவத்தில் வந்துள்ளன.
* சுதந்திரத்தின் பின்னர் இதுவரை ஒரு அரசியல் ரீதியான தீர்வு மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை காண முடியாமல் இருப்பது ஒரு பின்னடைவே. இந்த நூற்றாண்டுக்கேற்ப நாம் எமது பொருளாதார யுக்திகளை வகுக்க வேண்டும்.
* 2015 நாம் அமைத்த தேசிய அரசு செய்ய வேண்டியதை செய்யவில்லை.செய்யக் கூடாததை செய்தது. மக்களின் தேவை நிறைவேற்றப்படவில்லை.பாராளுமன்றம் இன்று கேலிப்பொருளாகியுள்ளது. துரதிஷ்ட சம்பவங்கள் நடக்கும் இடமாக அது மாறியுள்ளமை கவலைக்குரியது.
* இனப்பிரச்சினைக்கு தீர்வு பற்றி பல தலைவர்கள் பேசினர் . ஆனால் பொருளாதார முன்னேற்றம் பற்றி யாரும் கவனிக்கவில்லை. இரண்டுமே வெற்றியடையவில்லை.
* மாகாண சபைத் தேர்தல் ஒன்றரை வருட காலம் நடத்தப்படாமல் இருப்பது ஜனநாயகம் இல்லை. இதை பற்றி அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏதும் பேசாதது ஏன் ?
* தேசிய அரசை அமைக்க பேசப்படுகிறது.அது தேவைதானா? நான் ஊடகங்களில் அதை கண்டேன்.அதனை நான் நிராகரிக்கிறேன்.ஒரு எம் பியை சேர்த்து தேசிய அரசு அமைப்பது சரிதானா?
* போதைப்பொருள் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியுள்ளது..
* ஊழலை - மோசடியை - பாதாள உலக கோஷ்டியை ஒழிக்க நாம் திடசங்கற்பம் பூணுவோம்.
* தகைமை அடிப்படையில் அரச சேவை முன்னெடுக்கப்பட வேண்டும்.
2
ஒரேயொரு உறுப்பினரை தொடர்புபடுத்திக் கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைப்பது எப்படியான ஒழுக்கநெறி என்று தனக்குத் தெரியும் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்மொழியப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கு தான் எதிர்ப்பை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் இலங்கையின் 71ஆவது தேசிய தின நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 வரை மட்டுபடுத்த வேண்டுமென்பதே மக்களின் பிரார்த்தனையாகும். அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே தேசிய அரசாங்கத்துக்கு செல்கின்றனர்.
தேசிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு அரசியல் தலைவர் என்ற ரீதியில் தன்னால் முடியாமல் போயுள்ளது. தொடர்ந்து பொருளாதாரம் மந்த நிலையில் செல்வதற்கு மக்கள் தயாராகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தால் பல விடயங்கள் கிடைத்தது செய்ய முடியாத விடயங்களும் செய்யப்பட்டது. எனினும் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை.
மந்திரிமார்களின் உல்லாச அதிஉயர்விலை கொடுத்து கார்கள், இன்டர்கூலர்,குண்டுகள் துழைக்காத விலைஉயர்ந்த கார்களை வாங்க ஆயிரமாயிரம் கோடி டொலர்களை அரசாங்கம் சீனாவின் தனியார் வங்கிகளில் இருந்து கடன்களைப் பெற்றுள்ளது. அந்த ஆயிரமாயிரம் கோடி டொலர்களையும் அதன் வட்டிகளையும் செலுத்த மற்றுமொரு நாட்டின் வங்கிகளிலிந்து கோடான கோடி கடன்களைப் பெற்று அந்த கடன்களை அடைக்கின்றது. இனி அடுத்த மாதம் முன்பு பெற்ற கடன்களின் வட்டியைச் செலுத்த மற்றொரு நாட்டின் கடன் பிச்சைக்காக கைநீட்டுகிறது. இந்த அவலம் தான் கடந்த 13 வருடங்களாக நடைபெற்று வருக்கின்றது. தற்போது மத்தியவங்கியின் கவர்னராகக் கடமையாற்றும் கலாநிதி குமாரசுவாமி அவர்கள் பொதுமக்களுக்கு மறைக்காமல் உண்மை பேசுகிறார். ஏனெனில் அவருடைய திறமையைப் பயன்படுத்தி நாட்டை முன்னெடுத்துச் செல்ல அவர் பாடுபடுகின்றார். ஆனால் குறுகிய நோக்கமும் பேராசையும் கொண்ட அரசியல்வாதிகள் கடன் எடுப்பதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு செயல்படும்போது அவற்றைத்திரு்ப்பிச் செலுத்துவது பற்றி எந்த ஒரு மந்திரியும் பாராளுமன்றத்தில் பேசுவதிலலை. இதன் விளைவாக ஒவ்வொரு நாளும் கடன்வாங்குவதும் கடனுக்கான கடனையும் அதன் வட்டியையும் மீளச் செலுத்துவது பற்றி திட்டம் போடுவதும் தான் நிதிஅமைச்சின் வேலை. நேர்மையாகவும் நாட்டுப்பற்றுடனும் பணியாற்றி அரசியல்வாதிகளின் பகற்கொள்ளைகளை எதிர்ந்த ஒரே காரணத்துக்காக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிநீக்கப்பட்டுள்ளார்.அதன்விளைவாக தொடரும் பணிநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக ஒருநாளைக்கு 300 கோடிக்கு மேற்பட்ட வருமானத்தை நாடு இழக்கின்றது என்பதை பற்றி நிதிஅமைச்சருக்கோ, பிரதமருக் கோ அல்லது சனாதிபதிக்ேகா அது ஒரு பொருட்டல்ல. அப்படியானால் நாட்டின் பொருளாதார இழப்புக்கு யார் பதில் சொல்வது.
ReplyDelete