கொக்கேய்ன் பரிசோதனை செய்த புத்திக
உடலில் கொக்கேய்ன் உட்பட எந்த போதை மருந்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக பிரதியமைச்சர் புத்திக பத்திரன, மாத்தறையில் உள்ள தனது வீட்டில் இன்று இரத்தப் பரிசோதனை செய்துக்கொண்டார்.
மாத்தறை நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பணத்தை செலுத்தி அவர் இந்த இரத்தப் பரிசோதனையை செய்துக்கொண்டுள்ளார்.
அம்பியூலன்ஸ் வண்டியில் பிரதியமைச்சரின் வீட்டுக்கு வந்த தாதியர் உட்பட ஊழியர்கள் புத்திக பத்திரனவின் இரத்த மாதிரியை பெற்றுக்கொண்டனர்.
இதன் பின்னர் சிறுநீர் மாதிரி, சில தலை முடிகளையும் வெட்டி எடுத்துக்கொண்டனர். பரிசோதனை அறிக்கை பின்னர் கையளிக்கப்பட உள்ளது.
Post a Comment