தோல்வியடைந்து விடுவோம், என்ற அச்சத்தில் ஐதேக
ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களை பிற்போடுவதற்கான பிரதான காரணம் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சமே எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என்று குறிப்பிடுவது சந்தேகத்திற்கிடமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.
தேர்தல்களை உரிய காலத்திற்கு நடத்தாமல் மக்களின் அடிப்படை உரிமை மீறளில் ஈடுப்படுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிதான விடயமல்ல. கடந்த காலங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளையே அக் கட்சியின் தலைவர்கள் முன்னெடுத்தார்கள். அதன் தொடர்ச்சியினையே இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றார் எனவும் குற்றஞ்சாட்டினார்.
Post a Comment