டெனால்ட் டிரம் இலங்கை வருவாரா..? ஒபாமாவின் பயணம் வெசாக்கினால் ரத்தாகியது
அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, 2016ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஒன்று, சிறிலங்கா அரசாங்கத்தினால் தவறிப் போனதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய நிதியமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஒபாமாவினால் வழங்கப்பட்ட நாள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஒத்துவராததால், அந்தப் பயணம் சாத்தியமற்றுப் போனதாகவும், அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
மாத்தறையில் அமெரிக்க மையத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவினால் அப்போது சிறிலங்காவுக்கு வருவதற்கு ஒரு நாள் குறித்து தரப்பட்ட போதும், அந்த நாள் வெசாக் பண்டிகை என்பதால் சிறிலங்கா அதற்கு இணங்க முடியாத நிலை ஏற்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
”உண்மையில், பிராந்தியத்தில் பயணம் மேற்கொண்டிருந்த போது, சிறிலங்காவுக்கான அவரது ஒரு நாள் பயணத்துக்கான நாள் வழங்கப்பட்டது. அது ஒது வெசாக் பண்டிகை நாள்.
அவருக்கு அந்த ஒரு நாள் மாத்திரமே இருந்தது. நாம் பெரும் துயரத்துடன் அதற்காக வருந்த வேண்டியிருந்தது, ஏனென்றால் அவர் அப்போது வந்திருந்தால், அது நிச்சயமாக ஒரு வரலாற்றுப் பயணமாக அமைந்திருக்கும்.
ஆனால் நிச்சயமாக சொல்கிறேன், எதிர்காலத்தில் அத்தகைய ஒரு நாள் வரும். அமெரிக்க அதிபர் நிச்சயமாக சிறிலங்காவுக்கு வருவார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment