கொக்கைன் பாவிக்கும், பெண் அரசியல்வாதி
கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் பெண் எம்.பி ஒருவரும் இருக்கின்றார் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினரா? அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரா? என்பது குறித்த தகவலை வெளியிட மறுத்துள்ள ரஞ்சன் ராமநாயக்க அவரது புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாள்களில் இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் கம்பஹா, காலி, கொழும்பு, களுத்துறை, சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் சில மாகாண முதலமைச்சர்களும், மலையக பிரதிநிதிகள் முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய அமைச்சர்கள் என பலரும் இருப்பதாகத் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment